செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 9 ஜூன் 2023 (12:16 IST)

ஆண் துணை இல்லாமல் தனக்குத்தானே கர்ப்பமான பெண் முதலை- இது எப்படி சாத்தியமானது?

ஆண் முதலையின் துணை இல்லாமலேயே பெண் முதலை கர்ப்பம் தரித்துள்ள சம்பவம் முதம்முறையாக கோஸ்ட ரிகாவில் உள்ள காட்டுயிர் காப்பகம் ஒன்றில் பதிவாகியுள்ளது.
 
99.9% மரபணு ரீதியாக தன்னைப் போலவே ஒரு கருவை இந்த பெண் முதலமை உருவாக்கியுள்ளது.
 
"தன் கருவுறுவாதல்" என்று அழைக்கப்படும் நிகழ்வு பறவைகள், மீன் மற்றும் பிற ஊர்வனவற்றில் கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் முதலைகளில் தற்போதுதான் முதன்முறை கண்டறியப்பட்டுள்ளது.
 
இந்த பண்பு ஒரு பரிணாம மூதாதையரிடம் இருந்து பெறப்பட்டதாக இருக்கலாம் என்றும் எனவே டைனோசர்களும் சுய-இனப்பெருக்கம் செய்யும் திறன் பெற்றிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
ஜனவரி 2018 இல் பார்க் ரெப்டிலானியாவில் 18 வயதுடைய அமெரிக்கப் பெண் முதலைதான் இந்த முட்டையை இட்டுள்ளது. இதில் ஆச்சரியமானது என்னவென்றால், முட்டையிடுவதற்கு முன்பு எந்த ஆண் முதலையுடனும் அந்த பெண் முதலை இனச்சேர்க்கையில் ஈடுபடவில்லை.
 
முட்டையிட்ட முதலை இரண்டு வயதாக இருந்தபோது அங்கு கொண்டுவரட்டது. மேலும், அதன் வாழ்நாள் முழுவதும் மற்ற முதலைகளிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டது. அப்படியிருக்கும்போது இந்த முதலை எப்படி முட்டையை இட்டிருக்கும் என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனை அறிவதற்காக இதன் காரணமாக, பூங்காவின் அறிவியல் குழு அமெரிக்காவின் வர்ஜீனியா டெக்கில் பணிபுரிந்து வரும் டாக்டர் வாரன் பூத்தை தொடர்பு கொண்டது. அவர் 11 ஆண்டுகளாக பார்த்தினோஜெனிசிஸ் என்று அறிவியல் ரீதியாக அறியப்படும் தன் கருவுறுவாதல்கள் குறித்து படித்து வருகிறார்.
முதலையின் கருவை டாக்டர் பூத் ஆய்வு செய்தபோது, அது 99.9 சதவீதத்துக்கும் அதிகமாக தனது தாயின் மரபணுவை ஒத்திருப்பதை அவர் கண்டறிந்தார். மேலும், அந்த கருவுக்கு தந்தை இல்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். உள்ளே உள்ள கரு முழுமையாக உருவாகியிருந்தாலும் இறந்து பிறந்ததால் குஞ்சி பொரிக்கவில்லை.
 
இந்த கண்டுபிடிப்பு தனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
 
"சுறாக்கள், பறவைகள், பாம்புகள் மற்றும் பல்லிகள் ஆகியவற்றில் நாம் இதை பார்க்கிறோம், இது மிகவும் பொதுவானது மற்றும் பரவலாக உள்ளது." என்றார்.
 
முதலைகளில் பார்த்தினோஜெனிசிஸ் காணப்படாததற்குக் காரணம், மக்கள் அவற்றைப் பற்றிய நிகழ்வுகளைத் தேடாததுதான் என்று அவர் ஊகித்தார்.
 
''செல்லப் பாம்புகளை மக்கள் வளர்க்கத் தொடங்கியபோது பார்த்தீனோஜெனிசிஸ் பற்றிய செய்திகள் பெரிய அளவில் அதிகரித்தன. ஆனால் மக்கள் பொதுவாக முதலையை வைத்திருப்பதில்லை," என்று அவர் கூறினார்.
 
ஒரு கோட்பாடு என்னவென்றால், எண்ணிக்கை குறையும் போதும் அழிவின் விளிம்பில் உள்ள போதும் பார்த்தீனோஜெனீசிஸ் திறன் கொண்ட உயிரினங்களில் இது நிகழ்கிறது, சுற்றுச்சூழல் மாற்றங்களால் அவற்றின் எண்ணிக்கை குறைந்தபோது சில வகை டைனோசர்களுக்கு இது நடந்திருக்கலாம் என்று டாக்டர் பூத் பிபிசியிடம் கூறினார்.
 
பல்வேறு வகையான உயிரினங்களிலும் பார்த்தினோஜெனீசிஸின் முறையானது ஒரு மாதிரியாக இருக்கிறது. இது காலங்காலமாக மரபு உரிமையாக இருந்து வரும் மிகவும் பழமையான பண்பு. எனவே டைனோசர்களும் இந்த வழியில் இனப்பெருக்கம் செய்திருக்கலாம் என்ற கருத்துக்கு இது வலு சேர்க்கிறது.
தன் கருவுறுவாதல் என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது?
இதுதொடர்பாக அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்பக மையத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள முனைவர் அ.தணிகைவேல் பிபிசி தமிழிடம் பேசுகையில், "பார்த்தினோஜெனீசிஸ் என்பதை தமிழில் தன்கருவுறுவாதல் என்று கூறலாம். பெரும்பாலான உயிரினங்களில் ஒரு ஆண் உயிரணுவும், பெண் சினை முட்டையும் சேர்ந்து கரு உருவாகுகிறது. ஆண் பெண் உயிரணுக்கள் ஒன்றாக இணைந்து ஒரு கரு வளச்சியடைவைதன் மூலம் தான் புதிதாக ஓர் உயிரி ஜணிக்க முடியும். இதில், ஆண் உயிரினத்தின் துணையின்றிப் பெண் உயிரினமே கரு உருவாக்குவதை தன்கருவுறுவாதல் என்பர். உதாரணமாக, குருட்டுப் பாம்பு அல்லது புழுப் பாம்பு (Worm Snake) என்ற பாம்பு இனத்தில் ஆணே கிடையாது. பெண் மட்டும்தான் உள்ளது. பெண் பாம்பே தானாகக் கருவை உருவாக்கிக்கொள்ளும்.
 
மேலும் ஊர்வன வகைகளில் பெரும்பாலும் ஒருமுறை ஆணுடன் இணை சேர்ந்துவிட்டது என்றால் தங்களின் கருப்பாதையில் உள்ள குழாயில் விந்தணுக்களை நீண்ட காலம் சேகரித்து வைத்துக்கொள்ளும். தனக்குச் சாதகமான சூழல் வரும்போது கருசேர்ந்து முட்டைகளிட்டோ குட்டிகள் ஈன்றோ புதிய உயிரை உருவாக்கும். அமெரிக்காவில் ஒரு காட்டுயிர் காப்பகத்தில் இதேபோன்று நடந்துள்ளது. பல ஆண்டுகள் கழித்து ஒரு பாம்பு குட்டியை ஈன்றது. இது எப்படி சாத்தியம் என்று ஆராயும்போதுதான் இதைக் கண்டுபிடித்தனர். ஊர்வனவற்றில் இது மிகவும் இயல்பானது," என்றார்.
 
தன் கருவுறுவாதல் எந்தெந்த உயிரினங்களில் காணப்படுகிறது என்று தணிகைவேலிடம் கேட்டப்போது, "எறும்புகள், குளவிகள், தேனீக்கள் போன்ற முதுகெலும்பு அற்ற உயிரினங்களில் இது இயல்பாக உள்ளது. இதேபோல் தாவரங்களிலும் உள்ளது. விதையற்ற வாழை பழங்கள் உருவாவதை பார்த்தினோகார்ப்பிக் முறை என்கிறோம்" என்று தெரிவித்தார்.