1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 4 மார்ச் 2015 (11:18 IST)

'காப்பி அருந்துவதால் இரத்தக் குழாய் அடைப்பை தவிர்க்க முடியும்'

இதய நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான இரத்த குழாய்கள் கொழுப்பால் அடைபடுதலை, தினமும் 3 முதல் 5 காப்பிகள் வரை அருந்துவதன் மூலம் தவிர்க்க முடியும் என்று தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 
இருபத்தையாயிரத்துக்கும் அதிகமான ஆட்களை ஸ்கான் செய்து ஆராய்ந்த இந்த விஞ்ஞானிகள்,தினமும் மிதமான அளவு காப்பியை அருந்தி வருபவர்களுக்கு இரத்த குழாய்களில் கொழுப்பு பொருட்கள் படிவதற்கான ஆரம்பமான, ''கல்சியம் படிதல்'' குறைவாகக் காணப்பட்டதாக கூறியுள்ளனர்.
 
காப்பி அருந்துவதற்கும் இதய நோய்களுக்குமான தொடர்பு குறித்து சூடான வாதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
 
காப்பி அருந்துவது, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யலாம் என்று சில விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியும் உள்ளனர்.