1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 9 ஜூன் 2016 (19:38 IST)

சமூகத்திற்கு உயர் பாதிப்பு அளிக்கும் மன உளைச்சல்

மன உளைச்சல், இந்த நவீன சமுகத்தின் தீரா நோய். இளைஞர்கள், சிறுவர்கள், முதியோர்கள் என அனைவரையும் தாக்கும் இந்த மன உளைச்சல் பலரின் நம்பிக்கையுடன் போரிடுகிறது.


 

 
மன உளைச்சல் முக்கியத்துவம் வாய்ந்த உளநல பிரச்சினை என்று உலகளவில் மன உளைச்சல் பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
பெண்கள் மற்றும் 35 வயதுக்குக் கீழுள்ளவர்கள் அச்சம், பீதி, அமைதியின்மை உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டு அதிகமாக பாதிக்கப்படுவதை 48 ஆய்வுகளை பரீசலனை செய்துள்ள இந்த மீளாய்வு உறுதி செய்துள்ளது.
 
தற்கொலை ஆபத்தை அதிகரிக்க செய்வதாலும், சமூகத்திற்கு உயர் பாதிப்புகளை அளிப்பதோடு தொடர்புடையதாய் இருப்பதாலும் இந்த பிரச்சினைக்கு மிகுந்த கவனம் அளிக்கப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
ஐரோப்பிய ஒன்றியத்தில் மட்டுமே ஆண்டுக்கு 60 மில்லியன் மக்களை மன உளைச்சல் கோளாறு பாதிப்பதாக அவர்கள் அறிய வந்துள்ளனர்.
 
வட அமெரிக்கா இதனால் மிக மோசமாக பாதிப்பட்டுள்ளதா கருதப்படுகிறது. அங்குள்ளவர்களில் எட்டு சதவீதத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.