திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 26 மே 2020 (09:16 IST)

கொரோனா வைரஸ் சிகிச்சை: டிரம்ப் பயன்படுத்தும் மருந்தை தடுத்து நிறுத்திய உலக சுகாதார நிறுவனம்

மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவதை மருத்துவ பரிசோதனை பாதுகாப்பு அச்சம் கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல நாடுகளில் நடைபெற்று வந்த சோதனை பாதுகாப்பு கருதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹைட்ராக்சி குளோரோகுயின் கோவிட் 19ஆல் உயிரிழக்கும் ஆபத்தை அதிகரிக்கும் என மருத்துவ சோதனை ஒன்றில் தெரியவந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனாவிலிருந்து தன்னை காத்துக் கொள்ள இந்த மருந்தை உட்கொள்வதாக கூறியிருந்தார்.

மேலும் பல மருத்துவ ஆலோசனைகளுக்கு பிறகும் தொடர்ந்து மலேரியா சிகிச்சையில் வழங்கப்படும் இந்த மருந்துக்கு ஆதரவாக மீண்டும் மீண்டும் பேசி வந்தார்.

இந்த மருந்தால் இதயத்திற்கு பிரச்சனைகள் வரலாம் என பொது சுகாதார அதிகாரிகளும் டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.