1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (13:56 IST)

தீவிர சிகிச்சைப் பிரிவில் 2வது இரவு: எப்படி இருக்கிறார் பிரிட்டன் பிரதமர்?

கொரோனா வைரஸ் தொற்றுக்காக இரண்டாவது நாளாக தீவிர சிகிச்சைப் பிரிவில் போரிஸ் ஜான்சன் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
லண்டன் புனின் தாமஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜான்சன் குணமடைந்து வருவதாகப் பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது.
 
பிரதமர் பணிகளை தற்போது கவனித்து வரும் பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் போரிஸ் ஜான்சனை ஒரு 'போராளி' எனக் குறிப்பிட்டார். இந்த கொரோனாவையும் விரைவில் வெல்வார் என அவர் தெரிவித்துள்ளார்.
 
"போரிஸ் வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட சுவாசக் கருவிகள் உதவிகள் இல்லாமல் மூச்சு விடுகிறார்," என்று டொமினிக் தெரிவித்தார். கொரோனாவால் மோசாகப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே வெண்டிலேட்டரில் வைக்கப்படுவார்கள்.
 
டொமினிக், "போரிஸ் என் எசமானர் மட்டுமல்ல என் நண்பர். நம்முடைய வேண்டுதல்கள், நம் எண்ணமும் அவரைச் சுற்றியே உள்ளன," என்றார்.