செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 12 ஆகஸ்ட் 2020 (09:44 IST)

நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா: 102 நாள்களுக்குப் பின் உள்ளூர் தொற்று

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு மீண்டும் உள்ளூர் பரவல் மூலம் நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.


அந்நாட்டின் பெரிய  மாநகரங்களில் ஒன்றான ஆக்லாந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதையடுத்து ஆக்லாண்ட் நகரத்தில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் கொஞ்சம் சமூக இடைவெளி அறிவுறுத்தல்கள்  கடைபிடிக்கப்படும். நியூசிலாந்து கொரோனா தொற்றை கையாள்வதில் பிற நாடுகளைக் காட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு கொண்டிருக்கிறது.
 
பிப்ரவரி மாதம் அந்நாட்டில் முதல் தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து இன்றுவரை 1200 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் 22 பேர்  உயிரிழந்துள்ளனர்.
 
முன்னதாக நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு எந்த உள்ளூர் தொற்றும் ஏற்படாமல் இருந்தது. ஒருசில நாடுகளே இப்படிப்பட்ட மைல்கல்லை எட்டியுள்ளன. மார்ச்  மாதம் நியூசிலாந்தில் அறிவிக்கப்பட்ட பொது முடக்க கட்டுப்பாடுகள் ஏறக்குறைய முழுமையாக தளர்த்தப்பட்டிருந்தன.
 
நியூசிலாந்து சர்வதேச அளவில் பெரும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.