வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 25 பிப்ரவரி 2019 (09:31 IST)

"குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல், அவர்களை பலி கொடுப்பதற்கு ஈடானது" - போப் பிரான்சிஸ்

சிறார் மீதான பாலுணர்வு நாட்டம் குறித்து ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்காக வத்திகானில் நடைபெற்ற மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய போப் பிரான்சிஸ், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.


 
பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் "சாத்தானின் கருவிகளாக" இருந்ததாக கூறிய போப், ஒவ்வொரு வழக்கும் "மிகுந்த தீவிரத்தோடு" எடுத்துக்கொள்ளப்பட்டு, விசாரிக்கப்படுமென்று உறுதியளித்தார்.
 
அதுமட்டுமின்றி, தற்போது நடைபெற்று வரும் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் சம்பவங்கள், பாகன் என்னும் பழங்காலத்தில் அதீத மதநம்பிக்கை கொண்டவர்கள் மனிதர்களை பலி கொடுத்ததை தனக்கு நினைவூட்டுவதாக போப் மேலும் கூறினார்.
 
தங்களது தேவாலயங்களில் உள்ள பல்வேறு விதிமுறைகளை ஆய்வு செய்வதுடன், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களை தடுக்கும் வலுவான நடவடிக்கைகளை ஆயர்கள் எடுக்க வேண்டுமென்று தெரிவித்தார்.