வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: ஞாயிறு, 27 ஜூலை 2014 (11:36 IST)

காசாவில் மோதல் இடைநிறுத்தம், மேலும் 4 மணி நேரம் நீட்டிப்பு

காசாவில் அறிவிக்கப்பட்டிருந்த 12 மணி நேர மோதல் இடைநிறுத்தத்தை இஸ்ரேலிய அரசாங்கம் மேலும் நான்கு மணி நேரத்துக்கு நீட்டித்துள்ளது.
 
உள்ளூர் நேரப்படி காலை எட்டு மணிக்கு ஆரம்பித்திருந்த இந்த மோதல் இடைநிறுத்தம், இரவு பத்து மணி வரை கடைப்பிடிக்கப்படும் என்று தெரிகிறது.
 
தாக்குதல் நின்றிருந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு காசா மக்கள் வீதிகளுக்கு வந்திருந்தனர்.
 
மோதல் இடைநிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்ட நேரத்தில் பல டஜன் உடல்கள் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டிருந்தன.
 
வங்கிகளும் சில கடைகளும் மீண்டும் திறந்திருந்தன.
 
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான தற்போதைய சண்டைகள் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்றும், இவர்களில் பெரும்பான்மையானோர் சாதாரணப் பொதுமக்கள் என்றும் காசாவின் மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
இஸ்ரேலிய தரப்பில் சிப்பாய்கள் 40 பேரும் சிவிலியன்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
 
தாய்லாந்து பிரஜை ஒருவரும் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளார்.