Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பர்கரை கண்டுபிடித்த ஜிம் டெலிகட்டி காலமானார்

Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2016 (13:33 IST)

Widgets Magazine

மெக் டொனால்ட்ஸின் பிக் மேக் பர்கரை உருவாக்கிய மைக்கேல் ஜிம் டெலிகட்டி தன் 98 வது வயதில் காலமானார்.


 

1967ல், மைக்கெல் ஜிம் டெலிகட்டி, பன்றி இறைச்சி, லெட்டூஸ் கீரை, ஊறுகாய், வெங்காயம் மற்றும் ஒரு தனித்துவமான சாஸ் இவை அனைத்தையும் ஒரே பர்கரில் இருக்கும்படியான ஒரு சூத்திரத்தை கண்டுபிடித்தார்.அமெரிக்காவில் ஜிம், மெக் டொனால்ட்ஸ் நிறுவனத்தின் முதல் வர்த்தக உரிமையை பெற்று 1950களில் பல மெக்டோனால்ட் உணவகங்களை நடத்தினார். ஜிம் டெலிகட்டியை ''மாபெரும்'' மனிதர் என்றும், தங்கள் பிராண்ட் மீது அவர் ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் வர்ணித்துள்ளது.

பென்சில்வேனியாவில் உள்ள யூனிடவுன் என்ற பகுதியிலிருந்த உணவகம் ஒன்றில் ஜிம் டெலிகட்டி பிக் மேக் பர்கரை உருவாக்கினார்.ஜிம் டெலிகட்டியின் பிக் மேக் பர்கரில் ஏழு மூலப்பொருட்கள் இருந்தன. அந்த காலகட்டத்தில் மெக் டொனால்ட்ஸின் பிற விற்பனைக்கூடங்களில் விற்கப்பட்டுவந்த மற்ற உணவு வகைகளை காட்டிலும் இந்த பிக் மேக் பர்கர் விரிவாகவும், பெரியதாகவும் இருந்தது. 

''முதல்நாள் நாங்கள் சாதாரண `பன்`களையே பயன்படுத்தினோம், நடுவில் எந்தவொரு பிரெட் துண்டுகளையும் நாங்கள் பயன்படுத்தவில்லை'' என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் டெலிகட்டி 2007ல் பேட்டியளித்திருந்தார். ''இதன் காரணமாக பர்கர் குழகுழப்பாக ஆனது. அதற்கு அடுத்த நாள் ஒரு ரொட்டித்துண்டை நடுவில் வைத்தோம், இன்றைக்கும் அது அப்படியேதான் விற்கப்படுகிறது``. அதன் அளவைப் போலவே பர்கருடன் வழங்கப்படும் ரகசிய சாஸ் என்று அழைக்கப்படும் ஒன்றும் மிகவும் பிரபலம்.

கடந்த ஆண்டு ஒரு சாஸ் பாட்டில் ஒன்று ஏலம் போனது, சுமார் 12 ஆயிரம் பவுண்டுகளுக்கும் அதிகமாக விலை கோரப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய ராஜ்ஜியத்தில் விற்கப்படும் ஒரு முழு பிக் மேக் பர்கரில் 508 கலோரிக்கள் அடங்கியுள்ளன. தற்போது, உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் அது விற்கப்பட்டு வருகிறது.

பர்கரை கண்டுபிடித்ததை தொடர்ந்து, 48 மெக்டொனால்ட்ஸ் கிளைகளை நடத்தினார் ஜிம். இதன் காரணமாக, நிறுவனத்தின் வரலாற்றிலே, அதிக மெக்டொனால்ட்ஸ் விற்பனைக்கூடங்களை திறந்தவர் என்ற பெருமையை பெற்றார். 

2007ல், பிக் மேக் அருங்காட்சியகத்தை திறந்தார் ஜிம். அங்கு பார்வையாளர்கள் உலகிலே பெரிய பிக் மேக் பர்கர் முன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அந்த பர்கர் நான்கு மீட்டருக்கும் அதிகமாக அகலமானது. கடந்த திங்கட்கிழமை இரவு பிட்ஸ்பேர்க்கில் ஜிம் டெலிகட்டியின் குடும்பத்தார் உடன் சூழ்ந்திருக்க அவர் காலமானார். ஜிம் டெலிகட்டிக்கு மெக்டொனால்ட்ஸ் விற்பனைக்கூடங்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றன.

''ஜிம் ஒரு சிறந்த நபர், சமூகத்தை தழுவி குழுந்தைகளுக்கு நன்மை பயக்கும் பல நல்ல நோக்கங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உதவுவதில் முதன்மையானவராக திகழ்ந்தவர் '' என்று மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் நியூஸ்பீட்டிடம் தெரிவித்தார்.


Widgets Magazine

Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :  
news

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய வழிபாட்டிடம் - விருந்தாவன் சந்திரோதயா கோயில்

டெல்லியிலிருந்து தென்கிழக்கே 140 கிமீ தூரத்தில் இருக்கும் வி்ருந்தாவனில், உலகின் மிக ...

news

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஸ்பீக்கர் உதவியுடன் பேசும் ஜெயலலிதா : அப்பலோ மருத்துவமனை

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 'ட்ராக்யோஸ்டமி' செய்யப்பட்டிருப்பதால், சிறிய ஸ்பீக்கர் ...

news

ரிசர்வ் வங்கிகளில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தொடர்ந்து மாற்றிக் கொள்ளலாம்

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை இன்று முதல் வங்கிகளில் மாற்ற முடியாது என ...

news

ராஜிவ் காந்தி கொலை: பிரியங்காவுடன் சந்திப்பு பற்றி நளினி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் ...

Widgets Magazine Widgets Magazine