1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (10:48 IST)

பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் இன்று அறிவிப்பு!

இந்த ஆண்டு 'பிபிசி இந்திய சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதின்' மூன்றாவது பதிப்பை பிபிசி நடத்துகிறது. இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படும்.

இந்த விருது, இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் பங்களிப்பை கெளரவிப்பதாகும். மேலும், விளையாட்டில் சாதனை படைக்கும் பெண்களை கொண்டாடும் வகையிலும் இது அமைந்துள்ளது.
 
இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் வீராங்களில், விருது பெறுபவரைத் தேர்தெடுக்க பொதுமக்கள் 2022 பிப்ரவரி 28ம் தேதி, இந்திய நேரப்படி இரவு 11.30 (1800GMT) மணி வரை பிபிசி இணையதளங்களில் வாக்களிக்கலாம்.
 
இவ்விருதை வென்ற வீராங்கனையின் பெயர், 2022 மார்ச் 28ம் தேதியன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படும். அனைத்து விதிமுறைகளும், நிபந்தனைகளும், தனியுரிமை அறிவிப்புகளும் பிபிசி இணையதளத்தில் உள்ளன.
 
பிபிசி இந்திய மொழிகளின் இணையதளங்களிலும், பிபிசி ஸ்போர்ட் இணையதளத்திலும் முடிவுகள் அறிவிக்கப்படும்.
 
அதிக வாக்குகளைப் பெற்ற விளையாட்டு வீராங்கனையே பிபிசியின் இந்திய விளையாட்டு வீராங்கனையாக அறிவிக்கப்படுவார்.
 
இத்துடன் விருது வழங்கும் விழாவின்போது வரலாறு படைத்த விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கு பிபிசியின் வாழ்நாள் சாதனையாளர் விருதும், இளம் விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கு வளர்ந்து வரும் வீராங்கனைகான விருதும் வழங்கப்படும்.
 
கடந்த 2020ஆம் ஆண்டு, கொரோனா தொற்றுநோய் நம் வாழ்வின் அனைத்து நிலையிலும் பாதித்த கடுமையான காலக்கட்டத்துக்கு முன், இந்த விருதின் முதல் பதிப்பை பிபிசி அறிமுகப்படுத்தியது. இந்த விருது நிகழ்ச்சி, அதன் மூன்றாவது ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறது.
 
பிபிசியால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு, இந்திய விளையாட்டுப் வீராங்கனைகளின் இறுதிப் பட்டியலைத் தொகுத்தது. இதன் நடுவர் குழுவில் இந்தியா முழுவதும் உள்ள தேர்ந்த விளையாட்டுத்துறை பத்திரிகையாளர்கள், வல்லுநர்கள் மற்றும் விளையாட்டுத் துறை குறித்து எழுதுபவர்கள் உள்ளனர்.
 
இந்தியாவின் மிகச் சிறந்த ஊடகவியலாளர்கள், துறைசார் வல்லுநர்கள் மற்றும் விளையாட்டு குறித்து எழுதுபவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய தனித்துவமிக்க நடுவர் குழுவால் ஐந்து பேர் பிபிசியின் 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்கள்.
 
கடந்த ஆண்டு, சதுரங்க விளையாட்டு வீராங்கனை கொனேரு ஹம்பி, 2020ஆம் ஆண்டுக்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை வென்றார்.