வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2015 (14:20 IST)

பசில் ராஜபக்ஷ கைது

இலங்கை அரசின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு காவல்துறையினரால் இன்று இரவு கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவரை கடுவெல மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் முன்னர் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பசில் ராஜபக்ஷவின் வழக்கறிஞர் யூ ஆர் டி சில்வா தெரிவித்தார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பிறகு, இலங்கையைவிட்டு வெளியேறிய நிலையில் நேற்றுதான் பசில் நாடு திரும்பியிருந்தார்.
 
பசில் ராஜபக்ஷ மீது திவி நெகும திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளூர் நீதிமன்றம் ஒன்று அவரிடம் விசாரணைக்கு உட்படுத்த உத்தரவு பிறப்பித்திருந்தது. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளிக்கச் சென்ற பசில் ராஜபக்ஷ சுமார் பத்து மணி நேரம் விசாரணைக்கு பின்னர் கைது செய்துள்ளனர். அவருடன் இரண்டு உயரதிகாரிகளும் கைது செய்யட்டுள்ளனர்.