1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 18 ஜூலை 2014 (18:14 IST)

யுக்ரெய்ன் வான்பகுதி ஊடாக இந்திய விமானங்களை இயக்க வேண்டாம்

யுக்ரெய்னின் வான் பகுதி ஊடாக இந்தியாவின் விமானசேவை நிறுவனங்கள் விமானங்களை இயக்க வேண்டாம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

யுக்ரெய்ன்- ரஷ்ய எல்லையிலுள்ள கிழக்கு யுக்ரெய்ன் பகுதியில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ள சூழ்நிலையில், இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனங்களின் விமானங்களை அப்பகுதியில் இயக்க வேண்டாம் என்று இந்திய அரசு கூறியுள்ளது.
 
இதற்கிடையில், யுக்ரெய்ன்- ரஷ்ய எல்லையில் விழுந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்தியர்கள் எவரும் பயணிக்கவில்லை என்பதையும் அந்த அறிக்கையில் இந்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
 
நேற்று வியாழக்கிழமை, 33,000 அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 295 பேருடன் விழுந்து நொறுங்கியுள்ளது.
 
இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சந்தேகம் உள்ளநிலையில், அதுபற்றிய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
 
இந்த விமானத்தில் பயணத்தவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியிருந்த நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.