வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 1 அக்டோபர் 2021 (00:55 IST)

டைனோசர் இனங்களின் 50 எலும்புகள் - புதிய பார்வை தந்த கண்டுடிப்பு

புதிய கண்டுபிடிப்புகளுக்கு செரடோசூப்ஸ் இன்ஃபெரோடியோஸ் (முன்புறம்) மற்றும் ரிபார்வேனேட்டர் மில்னேரே என்று பெயரிடப்பட்டுள்ளது
 
125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தின் தென் பகுதியில் சுற்றித் திரிந்த இரண்டு புதிய டைனோசர் இனங்களின் கண்டுபிடிப்பு, அவை பற்றிய புதிய பார்வையை ஆராய்ச்சியாளர்களுக்கு கொடுத்துள்ளது.
 
இந்த மாமிச ஊர்வனங்களில் ஒன்றை "நரக ஹெரான்" என்று விவரிக்கும் பறவையியலாளர்கள், அதன் வேட்டை பாணியை பறவையின் அச்சுறுத்தும் வடிவத்துடன் ஒப்பிடுகின்றனர்.
 
இங்கிலாந்தின் ஐல் அவ் வைட் கடற்கரையில் மூன்று கால்விரல் டைனோசர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
 
அவை ஸ்பினோசாரிட் குழுவைச் சேர்ந்தவை என்றும் அவற்றின் நீளம் ஒரு மீட்டர் (3 அடி) மற்றும் மண்டை ஓடுகள் 9 மீ (29 அடி) நீளம் கொண்டதாக இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
 
டைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா?
நான்கு கால்கள் கொண்ட திமிங்கலம் - புதிய உயிரினம் கண்டுபிடிப்பு
இந்த 50 எலும்புகளை கண்டுபிடிக்க பல ஆண்டுகள் ஆனது.
 
 
ரிபார்வேனேட்டர் மில்னேரேவுக்கு, முதலைகளைப் போன்ற 1 மீ நீளமான மண்டை ஓடு இருப்பதாக கருதப்படுகிறது
 
இதில் செராடோசூப்ஸ் இன்ஃபெரோடியோஸ் என்று பெயரிடப்பட்டுள்ள முதலாவது மாதிரி, "கொம்பு முதலை முகம் கொண்ட நரக ஹெரான்" என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
 
புருவப் பகுதியைச் சுற்றி குட்டையான கொம்புகள் மற்றும் புடைப்புகள் இருப்பதால், ஹெரான் போன்ற வேட்டை பாணியை இது கொண்டிருக்கலாம் எனக் கருதி இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
இரண்டாவது மாதிரிக்கு ரிப்பரோவெனேட்டர் மில்னேரே என்று பெயர் வைத்துள்ளனர். இது சமீபத்தில் இறந்த பிரிட்டிஷ் தொல்லியலாளர் ஏங்கலா மில்னரின் நினைவாக "மில்னரின் ஆற்றங்கரை வேட்டையாளர்" என்று இது அழைக்கப்படுகிறது.
 
ஆரம்பத்தில் புதைபடிம சேகரிப்பாளர்கள், இரண்டு மண்டை ஓடுகளின் சில பகுதிகளைக் கண்டுபிடித்தனர், அதைத்தொடர்ந்து, டைனோசர் தீவு அருங்காட்சியக குழு டைடோனசர் வாலின் ஒரு பெரிய பகுதியை கண்டுபிடித்தது.
 
1983ஆம் ஆண்டில் சர்ரேயில் உள்ள ஒரு குவாரியில் பாரியோனிக்ஸைச் சேர்ந்த கடைசி ஸ்பினோசாரிட் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு ஒற்றை எலும்புகள் மற்றும் டைனோசரின் பற்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன.
 
பல வருட காலப்பகுதியில், இந்த எலும்புகள் ஐல் அவ் வைட், பிரிக்ஸ்டோன் அருகே உள்ள கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டன.
 
செளத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர் கிறிஸ் பார்கர், "பாரியோனிக்ஸில் கண்டறியப்பட்ட டைனோசர் எச்சங்களுடன் தற்போதைய டோனோசர் எச்சங்கள் வேறுபடுகின்றன. இதை பார்க்கும்போது, நாம் நினைத்ததை விட பல வகை ஸ்பினோசாரிட் டைனோசர்களுக்கு வாழ்விடமாக பிரிட்டன் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது'' என்றார்.
 
மூன்று கால் விரல் கொண்ட தெரோபாட் டைனோசர்கள் நிபுணரான இணை எழுத்தாளர் டேரன் நயிஷ், ""பாரியோனிக்ஸ் போன்ற டைனோசர்கள் ஐல் அவ் வைட் கண்டுபிடிப்புக்கு முன்பே இருந்ததை இரண்டு தசாப்தங்களாக நாங்கள் அறிந்திருந்தோம். ஆனால், இப்போது இந்த இரண்டு வகை டைசோனர்களின் எச்சங்களை கண்டுபிடித்திருப்பது ஆச்சரியமூட்டுகிறது," என்றார்.
 
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிற்குள் சிதறிச் செல்வதற்கு முன்பாக, ஸ்பினோசோரிட்கள் ஐரோப்பாவில் தான் முதலில் உருவாகியிருக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
சாண்டவுனில் உள்ள டைனோசர் அருங்காட்சியகத்தில் சுமார் 50 எலும்புகளின் சேகரிப்பு காட்சிப்படுத்தப்படவுள்ளது.
 
இது குறித்து அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர் டாக்டர் மார்ட்டின் மன்ட் கூறுகையில், "ஐரோப்பாவிலேயே ஐல் அவ் வைட்டில்தான் டைனோசர்களின் முதன்மையான இருப்பிடமாக இருந்திருக்க வேண்டும் என்பதற்கு இந்த ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன," என்று தெரிவித்தார்.