வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 7 மார்ச் 2020 (14:33 IST)

சௌதி அரேபிய அரச குடும்பத்தை சேர்ந்த மூவர் திடீர் கைது

சௌதி அரேபிய அரச குடும்பத்தின் மூன்று மூத்த உறுப்பினர்கள் காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமல் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
கைது செய்யப்பட்டவர்களில் சௌதி அரசரின் சகோதரரும் அடக்கம். இவர்களில் இருவர் சௌதி அரேபியாவில் மிகவும் செல்வாக்கு நிறைந்தவர்களாக விளங்குபவர்கள். இந்த கைது நடவடிக்கைக்கும் சௌதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
இதே போன்று, கடந்த 2017ஆம் ஆண்டு முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரில் சௌதி அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் ரியாத்தில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சௌதி அரேபியாவின் இளவரசராக கடந்த 2016ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது முதல் அந்நாட்டின் அறிவிக்கப்படாத ஆட்சியாளர் போன்று முகமது பின் சல்மான் விளங்கி வருகிறார்.
 
இந்த கைது நடவடிக்கை உள்ளூர் நேரப்படி, வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடந்ததாக நியூயார்க் டைம்ஸ் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. அரசரின் தம்பி இளவரசர் அகமது பின் அப்துல்அஸிஸ், முன்னாள் பட்டத்து இளவரசர் முகமது பின் நயீப் மற்றும் அரச குடும்பத்தை சேர்ந்த உறவினர் இளவரசர் நவாஃப் பின் நயீப் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
2017 ஆம் ஆண்டு முகமது பின் சல்மானால் வீட்டுக் காவலில் வைக்கப்படும் வரை முகமது பின் நயீப் சௌதி அரேபியாவின் உள்துறை அமைச்சராக இருந்தார்.