வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஜூன் 2015 (16:34 IST)

ஃபிஃபா: '10 மில்லியன் டாலர்' பற்றி பிபிசியின் புலனாய்வில் தெரியவந்தது

ஃபிஃபாவின் முன்னாள் துணைத் தலைவர் ஜாக் வார்ணரின் பொறுப்பில் இருந்த வங்கிக் கணக்குகளுக்கு ஃபிஃபா அமைப்பால் அனுப்பப்பட்ட 10 மில்லியன் டாலர் பணத்துக்கு என்ன நடந்துள்ளது என்பது பிபிசியின் புலனாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தென்னாப்பிரிக்கா 2010-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு முன்னதாக, அந்த நாட்டின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள இந்தப் பணம், கரீபியன் தீவுகளில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிப்பதற்காக வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.
 
ஆனால் பிபிசி ஆராய்ந்துள்ள ஆவணங்களின் படி, அந்தப் பணம் தனிப்பட்ட கடன்களுக்காகவும் கறுப்பு பண பரிமாற்றத்தை மறைப்பதற்காகவும் பணத்தொகை-எடுப்புகளாகவும் ஜாக் வார்ணரால் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
 
கிட்டத்தட்ட பணத்தில் அரைவாசித் தொகை வார்ணரின் சொந்த நாடான டிரினிடாட்டிலுள்ள சூப்பர்மார்க்கெட் நிறுவனத்திற்கே கொடுக்கப்பட்டுள்ளது.
 
தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள ஜாக் வார்ணர், தான் பலிக்கடாவாகியுள்ளதாக கூறியுள்ளார்.