1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வருடாந்திர ஜாதகம் விவரங்கள்
Written By
Last Modified: புதன், 27 டிசம்பர் 2017 (15:21 IST)

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மகரம்

இந்த வருமானம் சீராக இருப்பதால் கடன்கள் படிப்படியாக குறைந்துவிடும். உற்றார் உறவினர்களை அரவணைத்துச் செல்வீர்கள். பிராணிகளாலும் வருமானம் கிடைக்கும். வெளியில் கொடுத்த கடன்கள் தடையில்லாமல் குறித்த காலத்தில்  திரும்பக் கிடைக்கும். வீண் செலவுகளைத் தவிர்த்து விடுங்கள். நேர்முக மறைமுக எதிரிகளிடமிருந்து விலகி நின்று செயல்படுவீர்கள்.
இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் சராசரிக்கும் அதிகமான வருமானத்தைப்  பெறுவீர்கள். கைநழுவிப்போன பதவிகள் உங்கள் கையைத் தேடிவரும். சமுதாயத்தில் உடன்பிறந்தோரால் பாராட்டப்படுவர். உற்றார் உறவினர்கள் மீது உங்களது பாசம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டாகும். கவலைகள்  மறையும். சுகவீனங்களும் மறையும். தீய எண்ணங்கள் மனதில் புகாமல் இருக்கும். நண்பர்களையும் ஆதரிக்கும் மனப்பான்மை  உண்டாகும். அன்னையுடன் நல்ல உறவு தொடரும். சரியான நேரத்தில் உணவெடுத்துக் கொள்வீர்கள். மற்றபடி அனைத்துச்  செயல்களிலும் தெளிவான போக்கு தென்படும் காலகட்டமாக இது அமைகிறது.
 
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்து வந்த கெடுபிடிகள் மறைந்து சுமுகமான சூழ்நிலை தென்படும். உழைப்புக்குத்  தகுந்த ஊதியமும் கிடைக்கும். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். சக ஊழியர்களிடம்  இணக்கமான உறவு மேம்படும். அவர்கள் உங்கள் வேலைச்சுமையை பகிர்ந்து கொள்வர். சிலருக்கு வீடுகட்ட கடன்களும்  கிடைக்கும்.
 
வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசவும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். கடும்போட்டிகளையும்  சந்திக்க நேரிடும். எனவே புதிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம். கூட்டாளிகளும் சாதகமாக நடந்து கொள்வர்.
 
அரசியல்வாதிகளுக்கு அரசு அதிகாரிகளால் நன்மை உண்டாகும். எதிர்கட்சியினரிடமும் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். எதையும் முன்கூட்டியே அறிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வர். செல்வாக்கு உயரும். மற்றபடி  கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள்.
 
கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்து கொடுத்த பின்னரே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும். மற்றபடி சக  கலைஞர்கள் உதவக்கூடிய நிலையில் இருப்பதால் அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும். புதிய  கலைப்பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.
 
பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வர். பணவரவும்  சீராகவே இருந்துவரும். உடலாரோக்கியம் சிறப்பாக இருப்பதுடன் ஆன்மீகச் சுற்றுலாவுக்கும் சென்று வருவீர்கள். மேலும்  கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும். மாணவமணிகளின் புத்தி கூர்மையடையும். நல்ல  மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்புண்டாகும். போட்டிகளிலும் பங்கேற்று புகழும் பாராட்டும் பெறுவீர்கள்.
 
பரிகாரம்: சனிதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீபைரவரை வணங்கி வரவும். முடிந்தால் மிளகு விளக்கு  போடவும். சனிக்கிழமைதோறும் பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாருக்கு மல்லிகைப் பூவை அர்ப்பணித்து 3 முறை வலம்  வரவும். உங்களுக்கு  பொன்னான காலம் கனிந்து வரும். கிழக்கு, தெற்கு ஆகிய திசைகள் நன்மை தரும். சந்திரன் - செவ்வாய் -  குரு ஹோரைகள் அதிர்ஷ்டமாக இருக்கும்.