ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : புதன், 15 மே 2019 (17:56 IST)

ரிஷபம் - வைகாசி மாதப் பலன்கள்

(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) - எந்த செயலிலும் சொன்ன நேரத்தை காப்பாற்றி வெற்றி பெறும் ரிஷப ராசியினரே,  இந்த மாதம் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும்.  வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். மேலும் இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர்  செலவு ஏற்படும்.
குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது.
 
தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக  அலைய வேண்டி  இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
 
கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
 
அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து  பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.
 
பெண்களுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம்  உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரத்து கூடும்.
 
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும்.
 
கார்த்திகை 2, 3, 4 பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது.
 
ரோகிணி: இந்த மாதம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள்.
 
மிருக சிரீஷம் 1, 2, பாதம்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான  ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம். மேல் அதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை  உண்டாகும்.
 
சந்திராஷ்டம தினங்கள்: மே: 21, 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: மே: 15,16; ஜூன்: 11, 12
பரிகாரம்:  பவுர்ணமியில் பூஜை செய்து அம்மனை வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும் மனகவலை நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.