ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: திங்கள், 1 ஜூலை 2019 (19:17 IST)

ஜூலை மாத ஜோதிடப் பலன்கள்: மகரம்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)

கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் குரு (வ) - விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சனைகள் தீரும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது.

கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம்.

பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.

அரசியல் துறையினருக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். சின்ன விஷயத்துக் கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். . வேற்று மொழி பேசும் நபரால்  நன்மை உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.

உத்திராடம்:
இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரிய தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.  அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.

திருவோணம்:
இந்த மாதம் வயிறு தொடர்பான  நோய் ஏற்படலாம். பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன்  வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அவிட்டம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது  கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ண பகவனை பிராத்தனை செய்து வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26,