1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: சனி, 29 டிசம்பர் 2018 (18:40 IST)

ஜனவரி மாத பலன்: விருச்சிகம்

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

கிரகநிலை:
ராசியில் புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். தாயின் உடல்நலத்தில் தகுந்த அக்கறை காட்ட வேண்டும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் உங்கள் மனம் விரும்பும் படியான வெற்றிகள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல வேலை கிடைக்கும்.

தொழிலதிபர்கள் தங்கநகைகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்பவர்கள், ரத்தினகற்கள் விற்பனையாளர்கள் புதிய வாடிக்கையாளர்களை நிரம்ப பெற்று நன்மதிப்பும் பொருளாதார உயர்வும் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்கள் புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.

பெண்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். குழந்தைகளின் கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும்.

அரசயில்வாதிகள் பொதுமக்களுக்கு செய்யவேண்டிய பணிகள் உங்களுக்கு நிறையவே காத்திருக்கிறது. ஏற்கனவே இருக்கும் நல்ல பெயரை தற்காத்துக் கொள்வதற்கு இந்த காலகட்டம் மிகவும் உதவிகரமாய் இருக்கும்.

கலைத்துறையினர் கடன் வாங்கி செலவழிக்கும் நிலை உண்டாகும். தொழில் ரீதியாக உங்களை புறந்தள்ள நட்புடன் பழகியவர்களே முயற்சி செய்வார்கள். கடின உழைப்பை செயல்படுத்தினால் மட்டுமே முன்னேற முடியும்.

மாணவர்கள் தொழில்நுட்பப் பயிற்சி மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த அக்கறை செலுத்தி தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் படிப்பு ரீதியிலும் குடும்ப ரீதியிலும் தகுந்த ஒத்துழைப்பு தருவார்கள். சமூக சேவைகளில் அதிக ஆர்வம் இருக்கும். 

விசாகம்:
இந்த மாதம் நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும்.

அனுஷம்:
இந்த மாதம் விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது பற்றி முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.

கேட்டை:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி  வெற்றியை எட்டி பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி  கிடைக்கலாம்.  சிலருக்கு கூடுதல் பொறுப்புகள்  வந்து சேரும். வருமானம் கூடும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 19, 20
அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13, 14