வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (21:02 IST)

பிப்ரவரி மாத பலன் - மேஷம்

மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)


கிரக நிலை:
சுகஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
சுபப் பலன்களை எதிர்நோக்கி காத்திருக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும்.

பெண்களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சி களில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும்.

கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். எடுத்து கொண்ட வேலைகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.

அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து எடுத்து கொண்ட காரியங்களில் கவனம் செலுத்துவது நல்லது.

மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்ல பலன் தரும்.

அஸ்வினி:
இந்த மாதம் உடனிருப்பவர்களிடம் பேச்சைக் குறைத்துக்கொள்வது உத்தமம். மாணவர்கள் கல்வியில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது நல்லது.

பரணி:
இந்த மாதம் எதிலும் எதிர்நீச்சல்போட்டே முன்னேற வேண்டி இருக்கும். உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும். அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் சாதகமின்றியே இருப்பார்கள். மனைவி வழியில் மருத்துவச்செலவுகள் அதிகரிக்கும்.

கார்த்திகை 1- ம் பாதம்:
இந்த மாதம் பொருளாதாரநிலையில் சங்கடங்களையே சந்திப்பீர்கள். சிலருக்குக் கேட்டஇடத்தில் கடன் தொகை கிடைப்பதில்கூட தடைகள் ஏற்படும். குடும்பத்திலும் வீண் வாக்குவாதங்களும், ஒற்றுமைக் குறைவுகளும் ஏற்படும். உற்றார்-உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

பரிகாரம்: முருகனை வணங்க குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை தீரும். காரியவெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21