1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: புதன், 31 ஜூலை 2019 (15:50 IST)

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: மகரம்

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
 

கிரகநிலை:
ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன்,  ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில்  குரு (வ)  - விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:
இம்மாதம் 3ம் தேதி புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 7ம் தேதி லாப ஸ்தானத்தில் இருக்கும் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 10ம் தேதி செவ்வாய் பகவான் சப்தம ஸ்தானத்திலிருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சூரியன் பகவான் சப்தம ஸ்தானத்திலிருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சுக்கிரன் பகவான் சப்தம ஸ்தானத்திலிருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 21ம் தேதி புதன் பகவான் சப்தம ஸ்தானத்திலிருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 
பலன்:

சிந்தனையில் தெளிவில்லாத மகர ராசி அன்பர்களே, இந்த மாதம்  சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

குடும்பத்தில் ஏதாவது சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். உடல்நலனைப் பொறுத்தமட்டில் உடற்சோர்வு மன சோர்வு வரலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

பெண்களுக்கு எந்த முயற்சியிலும்  சாதகமான  பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம்

மாணவர்களுக்கு  கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறு வோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் கணவன்-மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படாது. நெருங்கியவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள் என்ற நினைப்பைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணமடையும்.

திருவோணம்:
இந்த மாதம் தொழில், வியாபாரம் செய்பவர்களும் நிறைய போட்டிகளை சந்திக்கநேரிடும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களைத் தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது.

அவிட்டம் 1, 2 பாதங்கள்:
இந்த மாதம் உங்களின் உடல் ஆரோக்கியம் அவ்வளவு திருப்திகரமாக இருக்கும் எனக்கூறமுடியாது. குடும்பத்திலும் வரவுக்குமீறிய செலவுகளால் பொருளாதாரத் தட்டுப்பாடுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளுக்கு உற்றார்-உறவினர்களே தடையாக இருப்பார்கள்.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைத்து வர உடல் ஆரோக்கிய மடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14