1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: புதன், 31 ஜூலை 2019 (15:49 IST)

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: தனுசு

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)
 


கிரகநிலை:
ராசியில் சனி (வ), கேது - களத்திர  ஸ்தானத்தில் புதன்,  ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில்  குரு (வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:
இம்மாதம் 3ம் தேதி புதன் பகவான் சப்தம ஸ்தானத்திலிருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 7ம் தேதி விரைய ஸ்தானத்தில் இருக்கும் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 10ம் தேதி செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்திலிருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சூரியன் பகவான் அஷ்டம ஸ்தானத்திலிருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சுக்கிரன் பகவான் அஷ்டம ஸ்தானத்திலிருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 21ம் தேதி புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திலிருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 
பலன்:

பயணங்களை மேற்கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக  பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.

குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம்  கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள்  திறமையான  பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன  யோகம் உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன்  பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.

கலைத்துறையினருக்கு வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.  மிக நன்மையான காலகட்டத்தில் இருக்கிறீர்கள். சக கலைஞர்களிடம் அனுசரித்து போவது நன்மைதரும்.

அரசியல்துறையினருக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை.

பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செய லாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.

உடல்நலனைப் பொறுத்தமட்டில் காய்ச்சல் தலைவலி ஏற்படும். மருத்துவ செலவு அதிகரிக்கும். கவனம் தேவை.

மூலம்:
இந்த மாதம் புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பங்காளிகளை அனுசரித்துச் செல்லவும். புதிய வாய்ப்புகள் சற்று தாமதமாகக் கிடைத்தாலும் நல்ல வாய்ப்புகளாக அமையும். பொருளாதார பாதிப்புக்கு ஆளாவீர்கள். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் உடல்நலக் குறைவுகளையும் உண்டாக்கும்.

பூராடம்:
இந்த மாதம் நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. விளையாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி போன்றவற்றாலும் ஓரளவுக்கு முன்னேற்றங்களை அடைய முடியும். அரசுவழியில் ஆதரவு கிடைக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக அமையும்.  முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பண விஷயங்களில் பிறரைநம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது. 

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12