ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ப‌ரிகார‌ங்க‌ள்
Written By
Last Modified: திங்கள், 30 ஏப்ரல் 2018 (12:12 IST)

நம் வீட்டிலிருந்து திருஷ்டி தோஷம் போக்க

வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் வந்து போவார்கள். இப்படி வந்து போகிறவர்களில் ஒருசிலர் மட்டு பொறாமைக் குணத்தோடு வீட்டிற்குள் வந்து செல்வார்கள். அவர்களின் பொறாமைத் தீ எனப்படும் திருஷ்டி தோஷம் நம் வீட்டினுள் புகுந்து கொள்ளும்.



அன்று முதல் வீட்டில் உள்ளவர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்படும். பண விரயம் ஏற்படும். பொருட்கள் வைத்த இடம்  தெரியாமல் போகும். சில பொருட்கள் உடைந்து போகும். கால்கள் இடறி காயங்கள் ஏற்படும். இத்தகைய பொறாமை எண்ணம்  கொண்டவர்களின் திருஷ்டியை விரட்டியடிக்க கீழ்க்கண்ட எளிய பரிகாரங்களைச் செய்து பயன் பெறலாம். திருஷ்டி பொம்மை  மாட்டுவதால் மட்டும் பரிகாரம் கிடைக்காது.

இல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும். ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவது  கண்பார்வை திருஷ்டி எனப்படும்.

* குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோசம் நீங்க, தெருமண் கொஞ்சம் எடுத்து கடுகு,உப்பு,மூன்று மிளகாய், எல்லாம் சேர்த்து  கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும். இது கண்  திருஷ்டியை போக்கும் இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்வார்கள்.

* எப்படிபட்டவர் வீட்டிற்குள் வந்து சென்றாலும் சுகம் கொடுக்க கூடியது சீரகம் என்று சித்தர்கள் வழிகாட்டி சென்று உள்ளார்கள். எனவே ஒவ்வொருவர் வீட்டிலும் விருந்து நடைபெறும் காலங்களில் கருப்பட்டி கலந்த சீரக பானகம் தயாரித்து வீட்டிற்கு  வந்தவர்களுக்கு கொடுத்தால் விஷப் பார்வை உள்ளவர்களின் திருஷ்டி தோஷம் விலகும்.

* திருஷ்டி தோஷம் விட்டினுள் அதிகமாக இருந்தால், அல்லது மந்து கஷ்டமாக இருந்தாலும் இந்த சீரகமும், கருப்பட்டியும்  லகந்த பானகம் தயாரித்து அதனை உங்கள் பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்துக்கு எடுத்து சென்று அங்கு உள்ள பக்தர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கும் கொடுக்க, திருஷ்டி தோஷம் விலகும். இரண்டு விட்டர் அளவு பானகம் போதுமானது.