ப.சிதம்பரம் மகன் வீட்டு ரெய்டுக்கு லதா ரஜினி காரணமா?
சமீபத்தில் சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பர்ம் மகன் கார்த்திக் சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள் என்பது தெரிந்ததே. இந்த ரெய்டு ரஜினியை பயமுறுத்தவே நடத்தப்பட்டதாக கராத்தே தியாகராஜன் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த நிலையில் இந்த ரெய்டுக்கு முக்கிய காரணம் லதா ரஜினிகாந்த், ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் ஆகியோர்களின் நெருங்கிய நட்பே என்று கூறப்படுகிறது. ரஜினியை வளைக்க பாஜக கடந்த சில ஆண்டுகளாக முயற்சித்து வந்தது. கடைசியில் தனிக்கட்சி ஆரம்பித்து பாஜகவுடன் கூட்டணி வையுங்கள் என்று பாஜக இறங்கி வந்தது.
இந்த நிலையில் பல ஆண்டுகளாக லதா ரஜினியுடன் நட்பில் இருக்கும் நளினி சிதம்பரம், 'பி.ஜே.பி சாயத்தோடு எந்த அரசியல் நடவடிக்கையிலும் ரஜினி ஈடுபட வேண்டாம். அப்படிச் செய்தால், அது தோல்வியில்தான் முடியும்’ என்று எடுத்துச் சொல்லி மனம் மாற்றும் வேலையில் ஈடுபட்டாராம் இந்தத் தகவலை அறிந்த பி.ஜே.பி தரப்பு கடும் டென்ஷன் ஆனாதாம். இதுவும் ரெய்டுக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. லதா ரஜினிக்கு நளினி சிதம்பரம் தான் சட்ட ஆலோசகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.