Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தினகரன் நாளையே ஆஜராக வேண்டும் - டெல்லி காவல்துறை அதிரடி

வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (13:01 IST)

Widgets Magazine

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில், தினகரன் கேட்ட அவகாசத்தை ஏற்க மறுத்த டெல்லி காவல்துறை, அவர் நாளையே அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 


 

 
அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தை பெற டெல்லியை சேர்ந்த சுகேஷ் சந்தர் என்பவரிடம் தினகரன் ரூ.60 கோடி பேரம் பேசி, ரூ.10 கோடியை முன்பணமாக கொடுத்தார் என டெல்லி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இதில் தொடர்புடைய சுகேஷ் சந்தரை கடந்த 17ம் தேதி போலீசார் கைது செய்ததோடு, அவரிடமிருந்து ரூ.1 கோடி 30 லட்சம் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர். மீதி பணம் ரூ. 8 கோடியே ரூ.70 லட்சம் எங்கே இருக்கிறது என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இதில் தினகரனுக்கு எதிரான வலுவாக ஆதாரங்களை அவர்கள் சேகரித்து வருவதாகவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தினகரனிடம் விசாரணை செய்ய கடந்த 19ம் தேதி இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் டெல்லி போலீசார் சென்னை வந்தனர். அதன் பின் நேராக தினகரன் வீட்டிற்கு சென்ற அவர்கள், தினகரனிடம் வருகிற 22ம் தேதி (நாளை) ஆஜராக வேண்டும் எனக் கூறிவிட்டு, அதற்கான சம்மனை அளித்து விட்டு சென்றனர். 
 
ஆனால், டெல்லி போலீசாரிடம் ஆஜராக தனக்கு 3 நாட்கள் அவகாசம் வேண்டும் என தினகரன் தரப்பு கோரிக்கை மனுவை தாக்கல் செய்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை, நாளையே தினகரன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
 
ஏற்கனவே பல வழக்குகளில் சிக்கி தவிக்கும் தினகரன், இந்த வழக்கில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

எம்எல்ஏ விடுதியில் 17 வயது சிறுமி பலாத்காரம்: இரண்டு பேர் அதிரடி கைது!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் 17 வயது சிறுமியை ...

news

லெஸ்பியன் வகை உறவில் மகள்; ரூ. 1,164 கோடி சொத்து: திருமணம் நடத்த போராடும் தந்தை!!

சீனாவை சேர்ந்த பில்லியனர் செசில் சாவோ, ஹாங்காங்கில் ரியல் எஸ்டேட் மற்றும் பிராப்பர்டி ...

news

சசிகலாவிற்கு வந்த விபரீத ஆசை - முழிக்கும் சிறை அதிகாரிகள்

சிறையில் உள்ள சசிகலாவிற்கு ஆங்கிலம் கற்க வேண்டும் என ஆசை வந்துள்ளதாம். எனவே, அவருக்கு ...

news

பல கோடி ரூபாய் மோசடி செய்த தீபா?: காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பல கோடி ரூபாய் மோசடி ...

Widgets Magazine Widgets Magazine