Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விரைவில் உண்மையான பொதுக்கூட்டம்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் நீக்கமா?


sivalingam| Last Modified புதன், 13 செப்டம்பர் 2017 (05:25 IST)
நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் விரைவில் உண்மையான பொதுக்கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்றும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் கட்சியில் இருந்து பதவியில் இருந்தும் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்


 
 
நேற்றிரவு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் திவாகரன் மேலும் கூறியதாவது:
 
சசிகலாவை நீக்க தீர்மானம் நிறைவேற்றியதைப் பற்றி நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். இவர்கள் கூட்டும் பொதுக்குழுவுக்கு அவரை நீக்கும் அதிகாரம் கிடையாது. 
 
தொண்டர்களின் ஆதரவு தினகரன் நியமித்தவர்களுக்குத்தான் இருக்கிறது. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களே அதிகாரத்தில் இருக்க முடியும். 
 
சீக்கிரமே உண்மையான பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும். பொதுச் செயலாளரான சசிகலாவிடம் இருந்து அனுமதி வாங்கி பொதுக்குழு கூட்டப்படும். பொதுக்குழுவுக்கான தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும்' 
 
இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :