Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினிகாந்த், திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு! பாஜகவுக்கு ஷாக் கொடுக்கவா?


sivalingam| Last Modified சனி, 22 ஏப்ரல் 2017 (00:27 IST)
தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. ஒருவழியாக சசிகலா குடும்பத்தினர்களை கட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டுவிட்டாலும், ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைவதில் இழுபறி நீட்டித்தே வருகின்றன. இந்த நிலையில் பாஜக ஏதாவது ஒரு பெரிய நடிகரை கட்சிக்குள் இழுத்து ஆதாயம் அடைய முயற்சி செய்கிறது. அதன் முதல் குறி ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.


 


இந்நிலையில் தமிழக அரசியலை உன்னிப்பாக அதே நேரம் ஒதுங்கி நின்று கவனித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று மாலை அவருடைய வீட்டிற்கு சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது திருநாவுகரசர் தனது மகள் திருமணத்தின் திருமண அழைப்பிதழ் கொடுத்ததாகவும், அப்படியே இன்றைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சாதாரணமானது என்றாலும் பாஜக இந்த சந்திப்பை உற்று நோக்கி வருவதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :