1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2016 (14:08 IST)

சர்வாதிகார சபாநாயகர்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் சபாநாயகர் சர்வாதிகார அடிப்படையில் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.


 

 
இன்று காலை சட்டப்பேரவையில் திமுக ஆட்சியில் நடந்த சம்பங்கள் குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். 
 
என்னை யாரும் கட்டாயப்படுத்த் வேண்டாம் என்று சபாநாயகர் தெரிவித்ததை அடுத்து திமுக கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
 
மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
 
அவையை நடத்தக்கூடிய சபாநாயகரைப் பொறுத்தவரையில் அவருக்கு மரியாதை தர வேண்டும், அவர் கட்டளைப்படி நடக்க வேண்டும் என்ற நிலையில் எங்கள் கடைமையை ஆற்றிக்கொண்டு இருக்கிறோம்.
 
நேற்று திமுக துணைத் தலைவர் துரைமுருகன் நிதி நிலை அறிக்கை மீது உரையாற்றிக் கொண்டிருக்கும்போது சட்டம் ஒழுங்கு குறித்து சில புள்ளி விவரங்களை எடுத்துச் சென்னார். அப்போது சபாநாயகர் நேரம் ஆகிவிட்டது அடுத்த பிரச்சனைக்கு செல்லுங்கள் என்று கூறினார்.
 
இதுபோன்று பல செய்திகளை அடுக்கி பிரச்சனைகளாக முன்வைத்தார். இதன்மூலம் சபாநாயகர் சர்வாதிகார அடிப்படையில் செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.