வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: சனி, 3 டிசம்பர் 2016 (16:57 IST)

அம்மா பேரவைக்கும் பே!பே ! அம்மா திட்டத்திற்கும் பே! பே!

கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவியேற்றதிலிருந்து கரூர் மாவட்ட அளவில் கட்சி நிகழ்ச்சிகள் பெரும்பாலான நிகழ்ச்சிகள் தள்ளிப்போடப்படுகின்றது என்ற கருத்து நிலவுகிறது.


 


இது ஒருபுறம் இருக்க,  அம்மா பேரவை சார்பில் நேற்று கரூர் அடுத்த பாலமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் முதல்வர் நலனுக்காக நடைபெற்ற குத்து விளக்கு பூஜையில், அவர் நேற்று கரூரில் இருந்தும் பங்கேற்காதது ஏன்? என்ற கேள்வி ஒருபுறமும், மழைகாரணமாக அம்மா திட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்ற செய்தியும் அ.தி.மு.க வினரிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
 
கரூர் மாவட்டத்தில் எப்போதுமே அ.தி.மு.க வின் கோட்டையாக இருந்த நிலையில் அப்போதைய தி.மு.க மறைந்த மாவட்ட செயலாளர் வாசுகி முருகேஷன், அப்போது அ.தி.மு.க வின் மாவட்ட செயலாளராக இருந்த வடிவேல் ஆகியோர் அங்கம் வகித்த நிலையில், சூதாட்ட கிளப் விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டதுடன், அவருக்கு எச்சரிக்கையும், அ.தி.மு.க சார்பில் விடப்பட்டது. 
 
பின்னர் ராஜா என்.பழனிச்சாமி மாவட்ட செயலாளராக பதவி வகித்தார். ஆனால் கட்சி பணியில் தோய்வு ஏற்பட்டதினால், அவருடைய பதவி அப்போது மாணவரணி மாவட்ட செயலாளராக கரூர் மாவட்ட அளவில் மட்டுமில்லாமல் அ.தி.மு.க அளவில் அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றும் அளவிற்கு பல பல செயல்களை செய்து வந்த செந்தில் பாலாஜிக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. 
 
மேலும் இதே செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் மட்டும் இரு முறை வெற்றி பெற்றதோடு, மூன்றாவது முறையாக தற்போது நடைபெற்ற அரவக்குறிச்சி தொகுதி தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார். 
 
ஆனால் கடந்த வருடம் இவர் அங்கம் வகிக்க மாவட்ட செயலாளர் மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் பதவிகளை மூத்த நிர்வாகிகளின் புகாரினால் பறிக்கப்பட்டது. பின்னர் அந்த புகார்கள் தவறானது என்று உணர்ந்த அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, மீண்டும் அவருக்கு அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பை கொடுத்தார்.


 

 
ஆனால், கரூர் மாவட்டத்தில்., அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க வின் கோட்டையாக உள்ளது. அந்த வெற்றியை முறியடிக்க செந்தில் பாலாஜியால்தான் முடியும் என்று அந்த கட்சியே ரகசிய உத்திரவு பிறப்பித்ததாகவும் தெரிகின்றது. 
 
அதேபோல் தி.மு.க வின் கோட்டையை கைப்பற்றினார் செந்தில் பாலாஜி, ஆனால், அதே வேளையில் நடந்த அ.தி.மு.க மற்றும் தி.மு.க வின் ஒப்பந்தம் இரு கட்சி நிர்வாகிகளிடையே மிரள வைத்துள்ளது. என்னவென்றால், மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது என்று தெரிந்த அரசியல் ராஜதந்திரி தி.மு.க தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க விற்குள்ளேயே காய் நகர்த்தினார். 
 
அதில் முதல் காயாக தம்பித்துரையை தி.மு.க வசம் இழுத்தனர். மேலும் தம்பித்துரைக்கு அரசியலில் சம்பாதிப்பது குறைவுதான். இந்திய அளவில், ஏன் உலகளவில் எஸ்.ஆர்.எம் கல்விக்குழுமம் போல தம்பித்துரையின் கல்லூரி மற்றும் கல்வி உலகமே உள்ளது. 
 
ஆகவே இந்த அரசியலில் தம்பித்துரையை பற்றியோ, தம்பித்துரையின் கல்லூரிகளை பற்றியோ நாங்கள் புகார் மற்றும் அவதூறு பரப்ப மாட்டோம், ஆனால் எங்கள் கட்சியையும் ஏதாவது அதாவது பாதியை பெற்றி பெற வைக்க ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டதாக தெரிகின்றது. 
 
இதற்கு நல்ல உதாரணமே, தி.மு.க தலைவர் கருணாநிதி முதன் முதலில் போட்டியிட்ட குளித்தலை தொகுதியை அதிகப்பெரும்பான்மை வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். 
 
ஆனால் அதே கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி தொகுதி எப்படியும் செந்தில் பாலாஜி வெற்றி பெற்று விடுவார் என்று கருதி தி.மு.க தரப்பிலும் தம்பித்துரை சொன்னதோடு, அந்த தேர்தலை நான் எப்படியாவது நிறுத்தி விடுவதாக கூறி  தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி வரை சென்று புகார் அளித்தார்.
 
அதுவும் சாதாரண புகார் அல்ல.. சுமார் 4 ஆயிரத்து 900 க்கும் மேற்பட்ட புகார்கள்.  தேர்தல் ஆணையத்தின் புகழையே கெடுத்ததாக டெல்லி அளவில் மற்ற பத்திரிக்கைகளால் பேசப்படுபவரும் தம்பித்துரை என்பதில் சந்தேகம் இல்லை.
 
இந்நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா எப்போதும் ஒரே முடிவு..  ஒரே கோட்பாடு என்ற நிலையில் அதே வேட்பாளரை அதே தொகுதியில் நிறுத்தி சுமார் 23 ஆயிரத்து 661 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற வைத்த பெருமை ஜெயலலிதாவையே சாரும். தற்போது அவர் வெற்றி பெற்று விட்டார். 


 

 
அவர் மட்டுமில்லாமல், தமிழகத்தில் இந்த இடைத்தேர்தலில் மூன்று தொகுதியிலுமே அ.தி.மு.க பெரும்பான்மை வித்யாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இதில் வேடிக்கையான விஷயம் என்ன வென்றால் அ.தி.மு.க வெற்றி பெற்றது என்று சந்தோஷமான நிலையில், தம்பித்துரைக்கும் தற்போது இருக்கும் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் பிடிக்கவில்லை என்பது தானாம், காரணம் 
 
எந்த தொகுதியிலுமே மறு வாக்கு எண்ணிக்கை என்ற விஷயமே சொல்ல முடியாமல், அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் மறு வாக்கு எண்ணிக்கை என்று சொல்ல வைத்தது அவர்களின் கூட்டு சதியாம்.  ஆனால் இவர் வெற்றி பெற்ற கரூர் தொகுதியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 441 வாக்குகள் மட்டுமே பெற்று வெற்றி பெற்ற நிலையில் எதிர்த்து நின்ற வேட்பாளரும், ஆதரவு தெரிவித்ததோடு, அனைத்து கட்சிகளும் ஒன்றும் சொல்ல வில்லை, காரணம் எல்லாம் அரசியல் ராஜ தந்திர பாணியில் கலைஞர் வழியில் அ.தி.மு.க வின் தம்பித்துரை என்கின்றனர். 
 
மேலும் தற்போது வெற்றி பெற்ற அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல கூட வெற்றி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி தயாராக உள்ள நிலையில், அ.தி.மு.க மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கனும் என்று செந்தில் பாலாஜியை தனக்கு கீழ் தான் வைத்துள்ளாராம். மேலும் எதிர்த்து நின்ற தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி கடந்த வாரமே வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி சொல்லி விட்டு சென்று விட்டாராம்.
 
நேற்று (03-12-16) அம்மா பேரவை சார்பில் அம்மா பேரவையின் கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ வுமான எஸ்.காமராஜ் தலைமையில் தமிழக முதல்வரும், அ.தி.மு.க கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்கள் பூரண குணமடைய வேண்டி கரூர் அடுத்த பவித்திரம் பகுதியில் உள்ள பாலமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. 
 
அந்நிகழ்ச்சிக்கும் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரவில்லை, காரணம் வெற்றி பெற்ற அதே தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி வருவதால் என்று விஜயபாஸ்கரின் கோஷ்டியினர் கூறுகின்றனர். 
 
மேலும் அம்மாதிட்டத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்பதாக அரசு தரப்பில் செய்தி வந்தும், அவர் பங்கேற்க வில்லையாம். காரணம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டதாம். ஆனால் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று முதல் இன்று வரை கரூரில் தான் இருக்கின்றார். 
 
இந்நிலையில் இன்று அவரது ஆதரவாளரும், அ.தி.மு.க கட்சியின் பிற அணியான எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ் தலைமையில் கரூர் அடுத்த தாந்தோன்றிமலை பகுதியில் நடைபெற்ற முதல்வர் ஜெயலலிதாவிற்காக நடைபெற்ற பூஜையில் பங்கேற்றார். 
 
ஏனென்றால் விஜயபாஸ்கரின் ஆதரவாளராம் வி.சி.கே.ஜெயராஜ், தற்போது உட்கட்சி பூசலில் சிக்கி தவிக்கின்றதா.. இல்லை..  உட்கட்சி பூசலை உருவாக்குகின்றாரா அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்று தெரியவில்லை. மேலும் கட்சியின் மூத்த நிர்வாகியும், மக்களவை துணை சபாநாயகருக்கு கீழ் வரும் கரூர் மாவட்டத்தில் இதை கண்டும் காணாத போல் தம்பித்துரை இருப்பது, கட்சியினரிடையே கொம்பு சீவி விடுவது போல் உள்ளது என்கின்றனர். 
 
மேலும் அ.தி.மு.க வினரோ, அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி பங்கேற்கும் விழாக்களை மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் புறக்கணிக்கின்றார் என்றால், இவரது வெற்றிக்கு எப்படி இவர் பாடு பட்டு இருக்க முடியும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எது எப்படியோ அ.தி.மு.க ஒன்று பட்டால் வலுமையான ஆளுங்கட்சியாக கரூர் மாவட்டத்தில் இருக்க முடியும் என்பது நடுநிலையாளர்களின் கருத்தாகும்.
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர் – கரூர் மாவட்டம்