Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தீபா பேரவைக்கு ஆள் சேர்க்கும் நபரை மிரட்டும் சசிகலா உறவினர்கள்...

Last Modified: புதன், 11 ஜனவரி 2017 (15:23 IST)

Widgets Magazine

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் சொந்த மாவட்டமான தஞ்சாவூரில், ஜெ.வின் அண்ணன் மகள் தீபா பேரவைக்கு ஆள் சேர்க்கும் நபரை சசிகலாவின் உறவினர்கள் மிரட்டிய விவகாரம் வெளியே கசிந்துள்ளது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின், அவரின் நீண்ட நாள் தோழி சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். விரைவில் அவர் தமிழகத்தின் முதல்வர் பதவியிலும் அமர்வார் எனத்தெரிகிறது. ஆனால், பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இல்லை எனத் தெரிகிறது. 
 
அதில் பலர் தீபாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். தீபா பெயரில் பேரவைகள் உருவாக்கப்பட்டு அதில் ஆள் சேர்க்கும் பணிகளிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீபா பேனர், போஸ்டர் என களை கட்டுகிறது. சில இடங்களில் தீபா பெயரில் புதிய கட்சியையும் அவர்கள் ஆரம்பித்துவிட்டனர். மேலும், சென்னையில் உள்ள தீபாவின் வீட்டிற்கு சென்று அவரை அரசியலுக்கு வரும்படி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி வருகிற 17ம் தேதி தனது அரசியல் பயணம் தொடரும் என தீபாவும் அறித்துள்ளார்.
 
இந்நிலையில், சசிகலாவின் சொந்த ஊரான மன்னார்குடியை உள்ளடக்கிய தஞ்சாவூர் மாவட்டத்திலும், தீபா பேரவைக்கு ஆள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்த பகுதி தீபா பேரவையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரான ராஜசேகரன் என்பவர், தீபாவிற்கு ஆதரவாக போஸ்டர் அடித்து பேரவைக்கு ஆள் சேர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். 
 
இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூரில் வசிக்கும் சசிகலாவின் உறவினர்கள் தன்னை தொடர்ந்து மிரட்டுவதாக அவர் ஒரு பிரபல வார இதழுக்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்துள்ளார். ‘தீபாவிற்கு ஆள் சேர்க்கும் வேலையை விட்டு விடவேண்டும். இல்லையெனில் நடப்பதே வேறு’ என்கிற தொணியில் அவர்கள் தன்னை மிரட்டுவதாக அவர் கூறியுள்ளார். 
 
ஆனால், அவர்களின் மிரட்டலுக்கு தான் பயப்படப்போவதில்லை எனவும், வருகிற 17ம் தேதி, தீபாவின் தலமையில் நாங்கள் அனைவரும் ஒன்று கூடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

"அவங்களுக்கு கொடுப்பீங்க; எங்களுக்கு கொடுக்கமாட்டீங்களா?” - கொந்தளிக்கும் சீமான்

ஓணம் பண்டிகை, குருநானக் ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி போன்ற பண்டிகைகளுக்கு விடுமுறை விடுகிற ...

news

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு ...

news

சசிகலாவை கிண்டலடித்த இயக்குனர் மனோபாலா மீது புகார்...

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குறித்து, இயக்குனர் ...

news

ஜல்லிக்கட்டுக்காக தடையை மீறுவது தவறில்லை

ஜல்லிக்கட்டு அவவரச் சட்டம் கொண்டுவராத பட்சத்தில் தடையை மீறுவதில் தவறில்லை என்று அன்புமணி ...

Widgets Magazine Widgets Magazine