ஜெயலலிதா ஒரு கருநாகம் ; யார் யாருக்கோ டாட்டா காட்டியவர் - பொன்னையன் பேச்சு


Murugan| Last Updated: செவ்வாய், 10 ஜனவரி 2017 (12:34 IST)
பல வருடங்களுக்கு முன்பு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை, தற்போதைய அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் மிகவும் இழிவாக பேசிய செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அதிமுக கட்சியில் இருப்பவர் பொன்னையன். 1980ம் ஆண்டு, தமிழகத்தின் முதல் அமைச்சராக எம்.ஜி.ஆர் இருந்த போது, அவரின் ஆட்சி மத்திய அரசால் கலைக்கப்பட்டது. அப்போது கட்சியில் எம்.ஜி.ஆருக்கு எதிராக ஜெயலலிதா செயல்பட்டு வந்தார் எனவும் கூறப்படுகிறது. 
 
அந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பொன்னையன் ‘ஜெயலலிதா ஒரு கருநாகம்.  தனது வீட்டின் பால்கனியில் இருந்து யார் யாருக்கோ டாட்டா காட்டிய நாலாந்தர பெண்மணி’ என கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அதற்கு பின் அதிமுக ஜெ.வின் கைக்கு சென்றவுடன், பொன்னையன் ஜெ.வின் புகழை பாடினார் என்பது வேறு கதை.


 

 
இந்நிலையில், அப்போது செய்தி தாளில் வெளியான அந்த செய்தியைத்தான் சிலர் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.
 
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி ‘சினிமாவில் செல்லாக்காசு ஆகி அரசியலுக்கு வந்த ஜெயலலிதா என்னை குறை கூறுவதா’  என பல வருடங்களுக்கு முன்பு பேசிய செய்தி சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பொன்னையன் பேசியது தற்போது வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :