முதல்வருக்கு மரியாதை இவ்வளவுதானா? மதுரை மக்களின் மனநிலை
முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று மதுரையில் தொடங்கியது. இதற்காக நேற்று காலையே மதுரை சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
ஆனால் முதல்வர் பழனிச்சாமி பேச ஆரம்பித்தவுடன் கூடியிருந்த கூட்டம் சிறிது சிறிதாக கலைய ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் பாதி மைதானத்திற்கும் மேல் காலியாகிவிட்டது.
இதே இடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்திருக்கும் என்றும் கூறிய அதிமுக தொண்டர் ஒருவர் எடப்பாடி பழனிச்சாமியை இன்னும் ஜெயலலிதா இடத்தில் வைத்து பார்க்க மதுரை மக்களுக்கு மனம் வரவில்லை என்று கூறினார்.