Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எம்.எல்.ஏ.சரவணன் வீடியோ மார்பிங் செய்யப்பட்டது: மாஃபா பாண்டியராஜன்


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 18 ஜூன் 2017 (12:47 IST)
எம்.எல்.ஏ.சரவணன் வீடியோ மார்பிங் செய்யப்பட்டது என்றும், 3 மாதம் கழித்து வெளியான வீடியோவில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்றும் ஓ.பி.எஸ் ஆதரவு மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

 

 
சமீபத்தில் மூன் டிவி மற்றும் டைம்ஸ் நவ் ஆகிய தொலைக்காட்சிகள் இணைந்து ஸ்டிங் ஆப்ரேஷன் நடத்தினர். அதில் கூவத்தூரில் இருந்து தப்பி வந்து ஓ.பி.எஸ் அணியில் இணைந்த எம்.எல்.ஏ.சரவணன், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.10 கோடி வரை தொகை வழங்கப்பட்டது என கூறும் வீடியோவை வெளியிட்டனர்.
 
இந்த வீடியோ வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் இருக்கும் மாஃபா பாண்டியராஜன் இதுகுறித்து கூறியதாவது:-
 
எம்.எல்.ஏ.சரவணன் வீடியோ மார்பிங் செய்யப்பட்டது. 3 மாதம் கழித்து வெளியான வீடியோவில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
 
கூவத்தூரில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானபோது ஓ.பி.எஸ் அணியினர் எம்.எல்.ஏ.க்கள் விலை போய்விட்டனர் என தெரிவித்தனர். ஆனால் தற்போது ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் மாஃபா பாண்டிராஜன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் கருத்து கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :