வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (18:18 IST)

உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியல் : கரூர் அதிமுகவினர் போர்க்கொடி

உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியல் : கரூர் அதிமுகவினர் போர்க்கொடி

கரூர் மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவராக இருந்து வருபவர் ஏ.ஆர்.காளியப்பன், இவர் ஏற்கனவே மாவட்ட செயலாளராகவும், முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது, மாவட்ட துணை செயலாளராக இருந்தவர்.


 

 
தற்போதைய புதிய மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வந்தவுடன் அவரின் ஆதரவில் கரூர் மாவட்ட அவைத்தலைவராக இருந்தவர் ஆவார். மேலும் நகர மன்ற துணை தலைவராகவும் இருந்து வந்துள்ளார். 
 
இந்நிலையில் கரூர் மாவட்ட அளவில் நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்களை முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்கள் நேற்று அறிவித்தார்.
 
ஆனால் அந்த அறிக்கையில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குளறுபடி இருந்ததாகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை கெடுப்பதோடு, கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயரை கெடுக்கும் வகையில் இருந்ததாகவும் குற்றம் சாட்டினர்.
 
மேலும், தற்போது கட்சியில் இணைந்தவர்களுக்கு, பொறுப்பா? என்று கூறி அம்மாவின் நிலைமையை கருத்தில் கொண்டு பொறுமையை கடைபிடித்த அ.தி.மு.க வினர் அம்மாவிற்கு இந்த செயல் தெரியும் படியும், பணம் வாங்கி கொண்டு சீட்டு வாங்கி தந்துள்ளதாக கூறி வீட்டை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்த சம்பவத்தினால் இப்பகுதியில் மட்டுமில்லாமல் சுமார் ஆயிரக்கணக்கான அ.தி.மு.கவினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டதோடு, முற்றுகையிட்ட சுமார் 100 ற்கும் மேற்பட்ட அ.தி.மு.க வினர் நீதி கேட்டு மாவட்ட செயலாளரை காண சென்றனர். 
 
ஆங்காங்கே தமிழகம் முழுவதும் வேட்பாளரை மாற்றக் கோரி தீக்குளிப்பு, முற்றுகை உள்ளிட்ட சம்பவங்கள் அ.தி.மு.க வில் நிகழ்ந்து வரும் நிலையில் கரூரில் அரங்கேறிய முதல் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

சி.ஆனந்தகுமார் - கரூர் மாவட்டம்