வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : புதன், 12 ஏப்ரல் 2017 (18:08 IST)

கலைஞர் கருணாநிதி நலமாக இருக்கிறார் - இன்று எடுத்த புகைப்படம்

திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.


 


மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் நோய் தொற்று காரணமாக கடந்த டிசம்பர் 15ஆம் தேதி இரவு காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, டிச.23ம் தேதி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். தற்போது அவர் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். 
 
மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின், அவர் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அவர் பெயரில் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. ஜல்லிக்கட்டு தொடர்பாக, அத்தனை போராட்டங்கள் நடந்த போதும் அவர் எந்த கருத்தும் கூறவில்லை. 
 
கை, கால், முதுகு, இடுப்பு, கழுத்து ஆகியவற்றில் என அவரது உடலில் ஏற்பட்ட கொப்பளங்கள், வயோதிகம் ஆகியவற்றில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார் கருணாநிதி. அதேபோல் அவருக்கு மறதி நோயும் ஏற்பட்டதாக கூறப்பட்டது. பழைய சம்பவங்களை அவருக்கு நினைவு படுத்தினால், அவருக்கு நினைவு திரும்பலாம் என மருத்துவர்கள் கூறியிருப்பதால், அதற்கான முயற்சியில் அவரின் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
 
மேலும், அவருக்கு, குழாய் வழியாக திரவ உணவு அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக கட்சி பிரமுகர்கள் உட்பட அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.  அவரின் உடல் நிலையில் எந்த குறையும் இல்லை. பேச்சு திறனும், ஞாபக சக்தியும் வந்து விட்டால், அவர் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார் என திமுகவினர் தொடர்ந்து கூறி வந்தனர். 

கடந்த சில மாதங்களாக கருணாநிதியின் புகைப்படங்கள் எதிலும் வெளியாக வில்லை. இந்நிலையில், இந்து நாளிதழின் தொழிற் சங்க தலைவருக்கான தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் இன்று கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், அப்போது எடுத்த புகைப்படத்தையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  அதில் கருணாநிதி நலமுடன் இருப்பதாக தெரிகிறது.
 
கனிமொழி வெளியிட்ட இந்த புகைப்படம் திமுகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.