வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2017 (05:00 IST)

செவிடருக்கு ஊதிய டெங்கு சங்கு வீண்: அரசு தூங்குகிறது: கமல்ஹாசன் காட்டம்

கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசை குறிவைத்து தனது டுவிட்டரில் தாக்கி வரும் கமல்ஹாசன் நேற்று டெங்குவால் பலியான மாணவர் ஒருவரை குறிப்பிட்டு இரண்டு டுவீட்டுக்களை காட்டமாக பதிவு செய்துள்ளார்.



 
 
அதில் 'செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். கோபாலபுரம் DAV பள்ளி மாணவன் பார்கவ் பலி. டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாஅரசு அகல வேண்டும்' என்று ஒரு டுவீட்டும், 'அரசு தூங்குகிறது பெற்ரோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர்' என்று இன்னொரு டுவீட்டையும் பதிவு செய்துள்ளார்/
 
நேற்று சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவன் பார்கவ் உயிரிழந்தச் சம்பவத்தைக் கருத்தில் கொண்டே கமல்ஹாசன் இந்த டுவீட்டை பதிவு செய்துள்ளார். ஏற்கனவே கடந்த ஜூலை 20ஆம் தேதி 'பள்ளிப் படிப்பை முடிக்காதவன் " நீட்" ன்கொடுமை புரியவில்லை. டெங்கு காய்ச்சல் புரியும். என் மகளுக்கு வந்தது.அதை கவனி அரசே! உமை யாம் கவனிப்போம், என்று டெங்கு குறித்து அவர் டுவீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.