கமலின் அடுத்த புரியாத டுவிட்! டாக்டர் அன்புமணிக்கு பதிலா?
உலக நாயகன் கமல்ஹாசன் பெரும்பாலும் தனது டுவிட்டில் சுத்தத்தமிழில் தனது கருத்துக்களை பதிவு செய்வதால் அவரது ரசிகர்கள் உள்பட பலருக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிவதில்லை
இந்த நிலையில் சமீபத்தில் டாக்டர் அன்புமணியிடம் கமல், ரஜினி அரசியல் வருகை குறித்த கேள்வியை கேட்டபோது அவர் கோபத்துடன், 'ரஜினி, கமல் அரசியல் அரசியலுக்கு வருவது தான் பிரச்னையா, இங்கே வாழ்வாதார பிரச்னைகள் இருக்கின்றன' என்று பதிலளித்தார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் நேற்று நள்ளிரவில் பதிவு செய்த ஒரு டுவீட்ட்டில், 'டாக்டர். நீங்கள் சொன்னதை நான் இங்கே வழிமொழிகிறேன். முந்திச் செல்வதைவிட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை. பின்பற்றுவோர் தொண்டரல்லர் மக்கள், குடியரசு புரிந்ததா? என்று கடைசியில் கேள்வி எழுப்பியுள்ளார்
கமல் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை என்றாலும் அன்புமணிக்கு ஏதோ சொல்லியிருக்கின்றார் என்பது மட்டுமே பெரும்பாலான ரசிகர்களுக்கு புரிந்துள்ளது