Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அவர் இஷ்டம், வந்தா வரட்டும்! ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து மு.க.ஸ்டாலின்


sivalingam| Last Modified செவ்வாய், 16 மே 2017 (04:45 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று ரசிகர்களிடையே பேசியபோது அரசியல் குறித்தும் பேசினார். அப்போது சில வருடங்களுக்கு முன் ஒரு கூட்டணிக்கு ஆதரவு கொடுத்ததாகவும், அது ஒரு விபத்து என்றும், அரசியல்வாதிகள் அரசியலை ஒரு தொழிலாக பார்ப்பதாகவும் விமர்சித்திருந்தார். திமுகவைத்தான் அவர் மறைமுகமாக விமர்சனம் செய்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.


 


மேலும் ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்தாலோ, அல்லது பாஜகவுடன் இணைந்தாலோ திமுகவுக்கு நஷ்டம் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்

இந்த நிலையில்  ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ”ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும் அவர் இஷ்டம். ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால், அதனை வரவேற்பேன்.” என தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக இந்த கருத்தை தெரிவித்தாலும் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்பதே பெரும்பான்மையான திமுகவினர்களின் கருத்தாக இருப்பதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :