Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நான் இமயமலைக்கு தான் போவேன் எனக்கு வேற வழியில்லை: ரஜினிகாந்த் உருக்கம்!

நான் இமயமலைக்கு தான் போவேன் எனக்கு வேற வழியில்லை: ரஜினிகாந்த் உருக்கம்!


Caston| Last Modified வெள்ளி, 19 மே 2017 (10:17 IST)
நடிகர் ரஜினிகாந்த் அவ்வப்போது இமயமலைக்கு போவது வழக்கம். இந்நிலையில் தற்போது ரசிகர்களை சந்தித்து பேசி வரும் ரஜினிகாந்த் என்னை தமிழ்நாட்டை விட்டு தூக்கி எங்கேயாவது போ என்று போட்டால் நான் இமயமலைக்கு தான் போவேன் என கூறியுள்ளார்.

 
 
நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகத்தை சேர்ந்த மராத்தியன் அவர் தமிழர் இல்லை என அவரை விமர்சிப்பவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்று. ரஜினிகாந்தின் உண்மையான பெயர் கூட சிவாஜி ராவ். இந்நிலையில் தற்போது ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசியுள்ளார்.
 
அப்போது பேசிய ரஜினி, 67 வயதாகும் நான் 23 ஆண்டுகள் தான் கர்நாடகாவில் இருந்தேன், மீதமுள்ள 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் உங்கள் கூடவே வளர்ந்தேன். பேரும், புகழும் அள்ளிக்கொடுத்து என்னை நீங்கள் தமிழனாக்கிவிட்டீர்கள். அதனால் நான் பச்சைத் தமிழன் என்னை எங்கேயாவது போ என்று வெளியே தூக்கிப் போட்டால் இமயமலையில் தான் வீழ்வேனே தவிர வேறு மாநிலத்திற்கு போக மாட்டேன் என கூறினார்.
 
உயிரோடு இருந்தால் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும், இல்லாவிடில் சிவன் இருக்கும் இமயமலைக்கு செல்ல வேண்டும். என்னை வாழ வைத்து அழகு பார்த்த உங்களை விட்டு நான் ஏன் செல்ல வேண்டும் என்றார் உருக்கமாக ரஜினி.


இதில் மேலும் படிக்கவும் :