வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : வியாழன், 16 மார்ச் 2017 (10:40 IST)

எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 4 பேர் மிஸ்சிங் ; அரசுக்கு ஆபத்தா? - அதிர்ச்சியில் அதிமுக

பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 4 எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளாத விவகாரம், அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் உரை தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. எனவே, இதுபற்றி விவாதிப்பதற்காக, சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை செயலகத்தில் நேற்று எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 
 
அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தினகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் மாலை 6.30 மணிக்கு தொடங்கி 7.35 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. இதில், எடப்பாடிக்கு ஆதரவளித்த 122 எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் மற்றும் அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்களான தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகிய நான்கு பேரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
 
இந்த விவகரம் தினகரன் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிலருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு நடந்த கூட்டங்களில் பங்கேற்ற அவர்கள், இந்த கூட்டத்தில் பங்கேற்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்னும் 5 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டாலே ஆட்சி கலைந்து விடும் சூழ்நிலையில், 4 எம்.எல்.ஏக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாதது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.