Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காலியாகும் கூடாரம்: தீபா பேரவையிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஓட்டம்?

bala| Last Updated: திங்கள், 20 மார்ச் 2017 (17:59 IST)
தமிழக முன்னாள் முதல்வர் மறைவுக்கு பின் அவரது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று முதலில் ஆதரவு கொடுத்தவர் முன்னாள் எம்.எ.ஏ. சவிந்தரராஜன். தீபா பேரவை தொடங்கியதும் அவருக்கு ஆதரவை அதிகரிக்க திருச்சி முழுவதும் சுற்றுப்பயணம் செய்தவரும் இவரே. ஆனால் தற்போது அவரது பேச்சு தீபா தரப்பை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சியில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சவுந்தரராஜன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் அவரது அண்ணன் மகள் தீபா அ.தி.மு.க.வை வழி நடத்துவார் என்று எதிர்பார்த்துதான் அவருக்கு ஆதரவு தெரிவித்தோம். ஆனால் பேரவை பொறுப்பாளர்களை நியமிப்பதிலேயே பல குழப்பத்தை ஏற்படுத்தினார். அதுமட்டுமின்றி ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து பேசுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இல்லை என்று கூறிவிட்டார். மேலும் தீபா நிலையாக எந்த முடிவும் எடுக்காமல் மாற்றி, மாற்றி பேசி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தீபாவின் கணவர் மாதவன் தனிக் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த இயக்கத்தில் இருந்து வெளியேறுவதற்காக நிர்வாகிகளை சந்தித்து பேசவே இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தேன் என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :