திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (12:34 IST)

அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? தீவிர ஆலோசனையில் சசிகலா!

நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது.


 
 
சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதி மன்றம். இந்நிலையில் இன்று காலை தீர்ப்பு வெளியான பிறகு கூவத்தூரில் கட்சி நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை நடத்திவருகிறார்.
 
நேற்று இரவும், இப்படியொரு சூழல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் கட்சி மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
ஆலோசனையின் முடிவில் கட்சியின் மூத்த உறுப்பினர்களான எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், திண்டுகல் சீனிவாசன் ஆகியோரின் பெயர் அடுத்த முதல்வர் வேட்பாளர் பட்டியலில் அடிபடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
இதை தவிஎத்து கூவத்தூர் சென்றுள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் பெயரும் இதில் சேர்க்க ஆலோசிக்கபட்டு வருவதாகவும் தெரிகிறது.