1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2017 (09:29 IST)

தீபா ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்; கொடி, சின்னம் அறிமுகம்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் தலமையை விரும்பாத, ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக புதிய கட்சியை தொடங்கியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும், சசிகலா குடும்பத்தினருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அவரது தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், அவரை முதல்வர் இருக்கையில் அமரவைக்க அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  
 
சசிகலாவின் தலைமையை பிடிக்காத அதிமுக தொண்டர்கள், அந்த கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். அதில் சிலர் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கும் செல்லும் அவர்கள் அவரை நேரில் பார்த்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். மேலும், தமிழகம் முழுக்க பல இடங்களில் அவரின் பெயரில் பேரவை துவங்கி வருகின்றனர்.
 
இந்நிலையில், ஈரோட்டில் நேற்று, தீபாவின் ஆதரவாளர்கள் புதிய கட்சி, கொடி, சின்னம் ஆகியவற்றை அறிமுகம் செய்தனர். ஈரோடு மாநகர எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலரும், 22வது வட செயலுருமான தமிழ் மாதேஸ் விட்டில் கட்சியின் துவக்க விழா நடைபெற்றது.
 
இந்த கட்சிக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அதிமுக என பெயரிடப்பட்டுள்ளது. கருப்பு, சிவப்பு, நடுவில் வெள்ளை நிறத்தில் கொடி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வெள்ளை பகுதியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்கள் இடம் பெற்றுள்ளன. இரட்டை ரோஜாவை சின்னமாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
 
மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள 42 அதிமுக கிளை கமிட்டிகளில், 31 கிளைகள் களைக்கப்பட்டு, அதற்கு மாற்றாக தீபா பேரவை துவக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். வருகிற 170 தேதிக்குள் நங்கவள்ளி ஒன்றியத்தில் 300 தீபா பேரவை கிளை கமிட்டிகளை அமைத்து எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
 
தமிழகத்தின் பல பகுதிகளில் தீபாவை ஆதரித்து பேனர்ககள் வைப்பது நாளுக்கு நாள் பெருகி வருவதோடு, சசிகலாவின் பேனர்கள் கிழிக்கப்படுவதும் அதிகரித்து வருவதால் சசிகலா ஆதரவாளர்க்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.