1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By bala
Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2017 (15:58 IST)

இரட்டை இலைக்கு உரிமை கொண்டாடும் தீபா

இரட்டை இலை சின்னம்  சசிகலாவிற்கோ அல்லது ஓபிஎஸ்க்கோ சொந்தம் கிடையாது. அது எங்களுக்கே சொந்தம் என தீபா தெரிவித்துள்ளார்.


 

அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணி, ஓபிஎஸ் அணி ஆகிய இரு அணிகளுமே கேட்பதால் யாருக்கு இரட்டை இலை என்ற முடிவை 24ம் தேதி தேதி தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. இதனால் இரு அணிகளுமே யாருக்கு இலை கிடைக்கும் என்று காத்துள்ளனர். இரட்டை இலை விவகாரத்தில் ஆரம்பம் முதலே அமைதியாக இருந்த தீபா தற்போது இரட்டை இலை எங்களுக்கே சொந்தம் என்று கூறியுள்ளார். இது குறித்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது. ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் ஜெயலலிதாவின் வாரிசு நான்தான் என்பதை ஏற்றுக் கொண்டு வாக்களிக்க தயாராகிவிட்டனர். இந்த தேர்தல் முடிவுக்கு பின் இரட்டை இலையை எங்களுக்கே சொந்தம் என்பதை நிருபிப்பேன். தீபா பேரவையை கலைத்துவிட்டு தொண்டர்கள் ஓபிஎஸ் அணியில் சேர்ந்துவருவதாக தவறான தகவல்கள் பரப்பபடுகின்றன. பொதுமக்கள் இதனை நம்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.