Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓபிஎஸ், ஈபிஎஸ் எல்லாம் அதுக்கு சரிப்பட மாட்டாங்க! நான் தான் அதிமுகவை காப்பாத்த போறேன்: தீபா


sivalingam| Last Modified சனி, 12 ஆகஸ்ட் 2017 (00:18 IST)
அதிமுகவின் இரண்டு அணிகளான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இப்போதுதான் ஒருவழியாக இணைப்புக்கு சம்மதித்து, சசிகலா குடும்பத்தையும் தைரியமாக எதிர்த்துள்ளது. 


 
 
சசிகலா, தினகரன் நீக்கம் என்பது ஜெயலலிதாவால் கூட செய்ய முடியாத ஒன்று என்று இருந்த நிலையில் தற்போது முதல்வர் ஈபிஎஸ் அதை தைரியமாக செய்துள்ளார். இரு அணிகளும் இணைந்துவிட்டால் மீதி நாட்கள் ஆட்சி காப்பாற்றப்படும் என்பது மட்டுமின்றி இரட்டை இலையும் கைக்கும் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த திடீரென சம்பந்தமே இல்லாமல் தீபா ஆஜராகியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு நீண்ட அறிக்கையில், 'அரியணையில் அம்மா விட்டுப் போன பணியானது எனது தலைமையில் தொண்டர்கள் ஆதரவுடன் நடைபெறப் போவது உறுதி. எனது தலைமையில் இரட்டை இலை சின்னத்தை மீட்டு கட்சியையும், கொடியையும் காப்போம் இணைப்பு என்ற நாடகம் நடத்தி தேர்தல் ஆணையத்தை இரு அணிகளும் ஏமாற்ற முடியாது; ஏமாற்றவும் விட மாட்டோம். இணைப்பு, பிணைப்பு, பிழைப்பு தேடிகளுக்கு மட்டுமே. 
 
இவ்வாறு ஜெ. தீபா அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :