திங்கள், 15 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : திங்கள், 13 மார்ச் 2017 (15:37 IST)

கூலிப்படையினர் மிரட்டல் ; வீட்டிலேயே இருக்க முடியவில்லை - தீபா ஓபன் டாக்

கூலிப்படையினர் மிரட்டல் ; வீட்டிலேயே இருக்க முடியவில்லை - தீபா ஓபன் டாக்
அரசியலில் இருந்து விலகும் படி கூலிப்படையினர் தன்னை மிரட்டுவதாக ஜெ.வின் அண்ணன் மகள் தீபா பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.


 

 
நேற்று இரவு 8.30 மணியளவில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெ.வின் சமாதிக்கு தீபா வந்தார். அதன் பின் சுமார் 40 நிமிடம் அங்கு தியானம் இருந்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது “ நான் அரசியல்லுக்கு வந்த பின் ஏராளமான மிரட்டல்கள் வருகிறது. என்னை கொலை செய்து விடுவதாக கூலிப்படையினர் மிரட்டுகின்றனர்.  முக்கியமாக, ஆர்.கே. நகர் தொகுதியில் நான் போட்டியிடக்கூடாது என மிரட்டுகின்றனர்.
 
என்னால் வீட்டிலேயே இருக்க முடியவில்லை. இவர்களெல்லாம் யார் என்றே எனக்கு தெரியவில்லை. நீங்கள் யார் எனக் கேட்டால், அவர்களின் பெயரைத்தான் மறைமுகமாக கூறுகிறார்கள்.  நான் ஆர்.கே.நகரில் போட்டியிடுவதை தடுக்க பல வழிகளில் சதி செய்து வருகிறார்கள். இதற்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை” என அவர் பேசினார்.