1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By சி.ஆனந்தகுமார்
Last Modified: சனி, 29 ஜூலை 2017 (17:50 IST)

விஜயபாஸ்கர் என்று பெயர் பெற்றாலே கொள்ளையடிப்பது தானா?:அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழகத்தின் புனித நதியான காவிரி நீரை காக்க கோரி, ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை பா.ம.க சார்பில், அக்கட்சியின் இளைஞரணி தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாசு தொடக்கினார். நேற்று முதல் துவங்கி இந்த விழிப்புணர்வு பேரணி இன்று ஈரோடு மாவட்டம், கொடுமுடி, கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், வாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன பிரச்சார பயணத்தை தொடக்கினார்.




இந்நிகழ்ச்சியில் ஆங்காங்கே மேடைகளில் பேசிய அன்புமணி ராமதாசு, தமிழகத்தில் விஜயபாஸ்கர் என்று பெயர் வைத்தாலே ஊழலுக்கும், கொள்ளைக்கும் பெயர் போனவர்கள் தான் என்று அர்த்தம் போல, அந்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குட்கா விற்பதில் பெயர் போய் உள்ளார் என்றும், இந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றார் என்று கூறிய அவர், இங்குள்ள காவிரி ஆற்றில் உள்ள நீரை கரூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு காகித ஆலை திருட்டுத் தனமாக உறிஞ்சுகின்றது என்று கூறினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாசு, மணல் வேண்டுமென்று மக்கள் கேட்கின்றார்கள் என்பதற்காக குறைந்த விலையில் ஆன்லைன் முறையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளாராம், தமிழகத்திற்கு ஒரு நாளைக்கு 30 ஆயிரம் லோடு மணல் தேவை, ஆனால் எடுப்பது 90 ஆயிரம் மணல் லாரிகள் லோடுகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மீதமுள்ள 60 ஆயிரம் மணல் லாரிகள் லோடுகள் எங்கே போகின்றது. கேரளா, கர்நாடகா, மாலத்தீவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றது. ஆன்லைனில் கொள்ளை, கொள்ளை என்று தான் கொள்ளை எடுக்கப்படுகின்றது. மேலும் மணல் இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டு வருவதாகவும், அந்த மணலுக்காக குறைந்த விலையில் மணல் விற்பனையாம், ஆனால் தமிழக அளவில் மக்கள் எவ்வளவோ, விஷயத்தில் கஷ்டப்பட்டு வருகின்றனர். அதை எடப்பாடி பழனிச்சாமி அரசு தவிர்க்க வில்லை.

டெங்குவை கட்டுப்படுத்த வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குட்கா விற்கின்றாராம் ? எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது ? வருமானவரித்துறையினர் குட்கா கம்பெனியினர் மட்டும் ரூ 40 கோடி கொடுத்துள்ளனராம். இதற்கு பா.ம.க சி.பி.ஐ விசாரணை வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றது என்றார் அவர் .

பேட்டியின் போது பா.ம.க மாநில தலைவர் ஜி.கே.மணி, பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் ஆகியோர்  உடனிருந்தார்.

கரூலிருந்து சி.ஆனந்தகுமார்