வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By Caston
Last Modified: புதன், 30 டிசம்பர் 2015 (19:58 IST)

பாரிஸ் தொடர் தாக்குதல் - 127 பேர் பலி

2015 நவம்பர் 13 அன்று இரவு பிரான்சின் தலைநகர் பாரிஸின் பல இடங்களில் துப்பாக்கி, குண்டு, தற்கொலைத் தாக்குதல்கள், மற்றும் பணயக்கைதிகளைப் பிடித்தல் போன்றவை அரங்கேறி உலகையே அதிரவைத்தது.


 
 
பிரான்சு விளையாட்டரங்கம், மற்றும் செயின்ட் டெனிசு என்ற வடக்குப் புறநகர்ப் பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளும், ஆறு இடங்களில் துப்பாக்கிச் சூட்டு நிகவுகளும் இடம்பெற்றன.
 
இந்த தாக்குதலில் 127 பேர் உயிரழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது, தாக்குதல் நடத்தியவர்கள் அனைத்து பேரும் கொல்லப்பட்டார்கள். இந்த தாக்குதல்களை அடுத்து, பிரெஞ்சு அரசுத்தலைவர் பிரான்சுவா ஆலந்து நாடு முழுவதும் அவசரகால நிலையைப் பிறப்பித்தார். பிரான்சுடனான எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டது. 1944 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக பாரிஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
தாக்குதல் நடந்த மறு நாள் ஐஎஸ் தீவிரவாதிகள் பாரிஸ் தாக்குதல்களுக்கு உரிமை கோரியது. சிரிய உள்நாட்டுப் போர் மற்றும் ஈராக்கிய உள்நாடுப் போர்களில் பிரான்சின் பங்களிப்பே இத்தாக்குதல்களுக்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.

2015 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளுக்கு கீழே கிளிக் செய்யவும்.....