1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2015 (18:49 IST)

அதிக சதங்கள் விளாசியவர்களில் சங்ககரா, டி வில்லியர்ஸ் அசத்தல்

அதிக சதங்கள் விளாசியவர்கள் [ஒருநாள் போட்டி] :
 
2015ஆம் ஆண்டு அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் உலகக்கோப்பையோடு ஓய்வுபெற்ற இலங்கை வீரர் குமார் சங்ககரா 5 சதங்கள் [14 போட்டிகள்] அடித்து முதலிடம் பெற்றுள்ளார்.
 

 
சங்ககரா இந்த உலககோப்பை தொடரில் தொடர்ந்து 4 சதம் அடித்து ஒருநாள் போட்டி வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். அவர் வங்காளதேசத்துக்கு எதிராக 105 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 117 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 104 ரன்களும், ஸ்காட்லாந்துக்கு எதிராக 124 ரன்களும் தொடர்ந்து குவித்து முத்திரை பதித்தார்.
 
தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் 5 சதங்கள் [20 போட்டிகள்] குவித்து முதலிடத்தை சங்ககராவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 
இலங்கையின் தில்ஷன், தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா, நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் மற்றும் மார்டின் கப்தில் ஆகியோர் தலா 4 சதங்கள் விளாசி இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
 
இந்தியாவின் ரோஹித் சர்மா, இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூசிலாந்தின் கனே வில்லியம்சன் தலா 3 சதங்கள் விளாசி 3ஆவது இடத்தில் உள்ளனர்.
 
அதிக சதங்கள் விளாசியவர்கள் [டெஸ்ட் போட்டி] :
 
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில், நியூசிலாந்தின் கனே வில்லயம்சன் [8 போட்டிகள், 16 இன்னிங்ஸ்கள்] மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் [12 போட்டிகள், 2 இன்னிங்ஸ்கள்] 5 சதங்கள் விளாசி முதலிடத்தில் உள்ளனர்.
 

 
ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் [12 போட்டிகள், 2 இன்னிங்ஸ்கள்] 4 சதங்கள் விளாசி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
 
மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் ஆசாத் ஷாகிப், யூனிஸ் கான், இந்தியாவின் அஜிங்கே ரஹானே, ஆஸ்திரேலியாவின் வோக்ஸ், இலங்கையின் ஆஞ்சலோ மேத்யூஸ், இங்கிலாந்தின் அலைஸ்டர் குக் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 3 சதங்கள் விளாசி 3ஆவது இடத்தில் உள்ளனர்.