வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2015 (18:24 IST)

அதிக ரன்கள் வாரி வழங்கியவர்களில் புவனேஷ்குமார் முதலிடம்

ஒரு ஆட்டத்தில் அதிக ரன்கள் வாரி வழங்கியவர்கள் [ஒருநாள் போட்டி] :
 
ஒருநாள் போட்டி ஒன்றில் அதிக ரன்கள் வாரி வழங்கியவர்கள் பட்டியலில் இந்தியாவின் புவனேஷ்வர் குமார் முதலிடத்தில் உள்ளார்.
 

 
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5ஆவது ஒருநாள் போட்டியின்போது 10 ஓவர்கள் வீசி 106 ரன்கள் வாரி வழங்கி இருந்தார். இதில் 12 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா 438 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜாசன் ஹோல்டர் 104 ரன்கள் வாரி வழங்கி இரண்டாவது இடத்தில் உள்ளார். உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 10 ஓவர்கள் வீசி 104 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் குவித்திருந்தது.
 
மூன்றாவது இடத்தில் ஆஃப்கானிஸ்தான் வீரர் தவ்லத் ஷத்ரான் உள்ளார். இவர் உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 10 ஓவர்கள் வீசி 102 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.
 
ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் வாரி வழங்கியவர்கள் [டெஸ்ட் போட்டி] :
 
டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ரன்கள் வாரி வழங்கியவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் ஷல்பிகர் பாபர் முதலிடத்தில் உள்ளார்.
 

 
அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின்போது 72 ஓவர்கள் வீசி 183 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.
 
இரண்டாவது இடத்தில் வங்கதேச வீரர் தைஜுல் இஸ்லாம் உள்ளார். இவர், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 51 ஓவர்கள் வீசி 179 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
 
3ஆவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் தேவேந்திர பிஷூ உள்ளார். இங்கிலாந்து எதிரான போட்டியில் பிஷூ 51 ஓவர்கள் வீசி 177 ரன்கள் வழங்கினார்.